வெளியே சிரிக்கிறேன்.. மனதளவில் ரொம்ப கஷ்டப்படுகிறேன் – வெளிப்படையாக கூறிய ராஷ்மிகா மந்தனா

0
rashmika-mandanna
rashmika-mandanna

கன்னட பெண்ணான நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் கீதகோவிந்தம், டியர் காம்ரேட் என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் இடம் பிடித்தார் பின் ஒரு கட்டத்தில் டாப் ஹீரோக்களுடன் நடித்து தன்னை தவிர்க்க முடியாத ஒரு நாயகியாக மாற்றிக் கொண்டார் இதனால்வோ என்னவோ இவருக்கு வாய்ப்புகள் ஏராளமாக குவிந்தது.

தமிழில் கார்த்தி நடிப்பில் உருவான சுல்தான் திரைப்படத்தில் ஹீரோயின்னாக நடித்து என்ட்ரி கொடுத்தார் ஆனால் அந்த படம் சொல்லும்படி வசூல் செய்யவில்லை. ஆனால் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு தமிழில் நடிப்பது ரொம்ப பிடித்திருக்கிறது என கூறினார் மேலும் நல்ல கதை அமையும் பட்சத்தில் மீண்டும் தமிழில் நடிபேன் என கூறினார்.

அதன்படி விஜயின் வாரிசு திரைப்படத்தின் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் படம் பொங்கலை முன்னிட்டு கடந்த 11ஆம் தேதி கோலாகலமாக வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்திய பேட்டி ஒன்றில் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

சில நேரங்களில் என் உடலால் மக்கள் மத்தியில் விமர்சனங்களுக்கு ஆளாகிறேன் நான் ஒர்க் அவுட் செய்யாமல் குண்டாக இருந்தாலும் தவறு.. வொர்க் அவுட் செய்து ஒல்லியாக ஆனாலும் தவறு.. நான் ஓவராக பேசினாலும் க்ரிஞ் என்று கூறுகிறார்கள் பேசவில்லை என்றால் இந்த பொண்ணுக்கு அதிக திமிரு என்று கூறுகிறார்கள்.

நான் என்னதான் செய்வது சினிமாவை விட்டு வெளியேறி விடவா.? இல்லை வேண்டாமா.? என்னிடம் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால் என்னிடம் அதை தெளிவாக கூறி விடுங்கள் என்னை தவறான முறையில் நினைக்காதீர்கள் உங்களுடைய வார்த்தைகள் மனரீதியாக துன்புறுத்துகிறது என கூறி உள்ளார்.