ஷூட்டிங்கில் அஜித்தை பார்க்க முடியலவில்லை ரொம்ப வருத்தப்பட்டேன்.! கடைசி நாளில் என்னை மெய்சிலிர்க்க வைத்து விட்டார் – பிரியதர்ஷினி பேட்டி.

நடிகர் அஜித்குமார் அண்மைக் காலமாக தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் வலிமை படத்தின்  வெற்றியை தொடர்ந்து தனது 61வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

அஜித்தின் 61-வது திரைப்படம் வருகின்ற தீபாவளி அன்று வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரை சொல்லி உள்ளார் இதனால் படத்தின் ஷூட்டிங் இரவு பகல் பார்க்காமல் போய் கொண்டிருக்கிறாராம் இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் பற்றிய செய்திகள் வெளி வருவது வழக்கம் அந்த வகையில் அஜித்துடன் நடித்த பிரபல நடிகையை பிரியதர்ஷினி சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித் குறித்து சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

பிரியதர்ஷினி இதுவரை ரெமோ, கவண், நேர்கொண்டபார்வை போன்ற படங்களில் நடித்துள்ளார். பேட்டியில் அஜித் பற்றி சொன்னது. அஜித் சாரின் நேர்கொண்ட பார்வை படத்தில் ஷர்தா ஸ்ரீகாந்தின் பாஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அந்தப் படத்தில் அஜீத் சாருடன் இணைந்து நடிப்பதற்கான வாய்ப்புகள் அமையவில்லை அவர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அவர் கூட..

இணைந்து நடிக்க முடியாமல் போய்விட்டது என ரொம்ப வருத்தப்பட்டேன் கடைசி நாள் சூட் ராமோஜிராவ் செட்டில் நடந்தது. எனக்கும் அன்று காட்சிகள் இருந்தது நானும் அங்கு சென்று இருந்தேன்.  எல்லோருக்கும் நன்றி சொல்வதற்காக அஜித் சார் வந்து இருந்தார் அவரை சந்திக்கும்  வாய்ப்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.

அவர் முன்னாள் நாம் நிற்கும் பொழுது ஏதோ ராஜா முன்னால் நிற்பது போல இருக்கும் ரொம்பவும் பணிவாக இருப்பார் அவர் பாடி லாங்குவேஜ்ஜில் தெரியும் என்னை விட அவர் ரொம்பவும் உயரம் ஆனால் என்னிடம் பேசும்பொழுது குனிந்து பேசினார் அவ்வளவு பெரிய நடிகர் சின்ன சின்ன ரோலில் நடிக்கும் நடிகைக்கும் இவ்வளவு மரியாதை கொடுத்து பேசுவதை பார்க்கும் பொழுது ரொம்ப ஆச்சரியமாக இருந்தது அந்த சந்திப்பை என்னால் மறக்க முடியாது என கூறினார் நடிகை பிரியதர்ஷினி.

Leave a Comment