நான் சினிமா உலகில் எந்த உச்சத்தை தொட்டலும் சரி.! இதை மட்டும் நான் அழிக்கவே மாட்டேன் – ரஜிஷா விஜயன் அதிரடி.

சினிமாவில் அசாதாரணமான திறமையை வெளிப்படுத்தும் நடிகர் நடிகைகள் ரசிகர்களை மட்டும் கவராமல் பல தயாரிப்பாளர்கள் இயக்குனர்களையும் வெகுவாக கவர்கின்றனர். அதனால் பிற மொழிகளிலும் தலை காட்ட முடியும் அந்தவகையில் மலையாளத்தில் கோக்கோ, ஜூன் போன்ற பல்வேறு திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த ரஜிஷா விஜயன்.

தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதை சரியாக பயன்படுத்தி தற்போது தமிழ் சினிமாவிலும் தனக்கான ஒரு இடத்தை பிடிக்க முயற்சி செய்கிறார்.

இப்படி இருக்க  தெலுங்கில் தற்போது ஓரிரு பட வாய்ப்புகள் குவிந்து உள்ளதால் இவரது திரை உலக பயணம் விரித்துக் கொண்டே செல்கிறது. ஆள் பார்ப்பதற்கு சூப்பராக இருப்பதோடு இவரது நடிப்பு திறமையையும் சிறப்பாக இருப்பதால் இவர் இன்னும் குறைந்தது ஆறு ஏழு ஆண்டுகளுக்கு சினிமா உலகில் ஒரு ரவுண்ட் அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்தார் அப்பொழுது அவரது  கன்னத்தில் மச்சம்  குறித்தும்  கேள்வி எழுப்பினர் அதற்கு அவர் கூறிய ரஜிஷா விஜயன் எனது அடையாளமே அதுதான் அதை எந்த ஒரு திரை படத்திற்காகவும் அழிக்க மாட்டேன் அது என்னுடன் தான் இருக்கும்.

ஓபன் ஆக பதிலளித்தார் இச்செய்தி தற்போது அவரது ரசிகர்களை ஆட்டம் போட செய்ததோடு மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் மலையாள சினிமா உலகில் பேசும் பொருளாகவும் இச்செய்தி அமைந்துள்ளது.

Leave a Comment

Exit mobile version