விஜயின் “வாரிசு” படத்தில் நானும் இருக்கிறேன் – நடிப்பதை உறுதி செய்த பிக்பாஸ் பிரபலம் – வீடியோ உள்ளே..

vijay
vijay

திறமையான நடிகர்கள் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து  வருகின்றனர் அந்த வகையில் தளபதி விஜய் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படம் வெற்றிப்படம் தான் இப்பொழுது கூட தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து தனது 66 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்திற்கு வாரிசு என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ஆக்ஷன், சென்டிமென்ட்,காமெடி என அனைத்தும் கலந்த ஒரு மாஸ் திரைப்படமாக உருவாகி வருகிறது இந்த படத்தை மிகப் பிரம்மாண்ட பொருள் செலவில் தில் ராஜு தயாரிக்கிறார். இரண்டு கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு  விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

வாரிசு படத்தில் விஜய் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, குஷ்பு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஸ்ரீகாந்த், யோகி பாபு, ஷாம் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர் இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு திட்டவட்டமாக சொல்லி உள்ளது.

இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் படத்தில் மற்றொரு முக்கிய பிரபலமும் இணைந்துள்ளார் அந்த பிரபலம் வேறு யாரும் அல்ல தமிழ் சினிமாவில் பல படங்களில் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன். இவர் சினிமாவில் நடிப்பதையும் தாண்டி கமலஹாசன் தொகுத்து வழியாக பிக்பாஸ் நிகழ்ச்சிகளும் தலை காட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தற்பொழுது விஜயின் வாரிசு திரைப்படத்தில் இணைந்துள்ளார் அதை அவரே அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைதள பக்கத்தில் அதிரடியாக கூறியுள்ளார் வீடியோவையும் வெளியிட்டு அதில் விஜய் சாருடன் வாரிசு படத்தில் பணி புரியப்போவது மிக மகிழ்ச்சியாக உள்ளது என கூறியுள்ளார் இதோ அவர் மேக்கப் போடும் அந்த வீடியோ

ganesh
ganesh