நான் ஏடிஎம் தான், அழகு இருந்தால்தான் மதிப்பார்கள்.! கோலிசோடா பட நடிகையின் தற்போதைய நிலை.?

0
goli-soda
goli-soda

தமிழ் சினிமாவில் கோலி சோடா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை சீதா. இவர் அதன் பிறகு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு கோலி சோடா திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவில் ஒரு நல்ல இடம் கிடைத்தது.

அதன் பிறகு விக்ரம் சமந்தா நடிப்பில் வெளியான 10 எண்றதுக்குள்ள என்ற திரைப்படத்தில் சமந்தாவின் தோழியாக நடித்திருப்பார். இப்படி சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை சீதா சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய நிலைமை குறித்து சில தகவல்களை கூறியிருந்தார்.

அதாவது அவர் கூறியது எங்க வீட்டில் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை அம்மா வீட்டு வேலை செய்து தான் இன்று வரைக்கும் வாழ்க்கை போய்க்கொண்டே இருக்கிறது. மேலும் நான் தற்போது பிஏ படித்துக் கொண்டிருக்கிறேன் அம்மா தான் எல்லாத்தையும் பார்த்துக் கொள்கிறார்கள். எனக்கு எங்க அம்மாவை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது மிகவும் ஆசை.

அப்போதுதான் கோலிசோடா படம் வாய்ப்பு எப்படி கிடைத்தது என்று கூறியிருந்தார் அதாவது கோலி சோடா பட இயக்குனர் விஜய் மில்டன் அவர்கள் தன்னிடம் வந்து என்னுடைய பெயர் மற்றும் போன் நம்பரை கேட்டார் ஆனால் நான் அவரை திட்டி விட்டேன். அதன் பிறகு தன்னுடைய நண்பர்களிடமும் என்னுடைய போன் நம்பரை கேட்டு இருக்கிறார் ஆனால் அவர்களும் அவரை திட்டி விட்டார்கள்.

அதன் பிறகு வீட்டிற்கு சென்று தன்னுடைய அம்மாவிடம் இது போன்ற படங்களில் உங்களுடைய மகளை நடிக்க வேண்டும் என்று கூறி எங்க அம்மாவிடம் சம்மதத்தை வாங்கிக் கொண்டார். அதன் பிறகு தன்னுடைய அம்மாவும் இதற்கு ஒப்பு கொண்டார்கள் அதன் பிறகு அவருடைய ஆசைக்காக தான் நான் சினிமாவிற்கு வந்தேன்.

ஆனால் சினிமாவிற்கு நான் நடிக்கப் போகிறேன் என்று சொன்னதும் பலரும் இதெல்லாம் ஒரு மூஞ்ச இதுக்கெல்லாம் படம் வாய்ப்பு கிடைக்குமா என்று கேலி செய்தார்கள். நடிக்க வேண்டும் என்றால் அழகு தானே முக்கியம் நான் ஏடிஎம் தானே என்று வருத்தத்துடன் கூறியிருந்தார். அது மட்டுமல்லாமல் இன்னும் பல திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று என்னுடைய ஆசை என்று கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.