தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் இலியானா, இவர் முதன் முதலில் வடிவழகிய தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்தார், அதன்பிறகு தேவதாசு என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார், அதேபோல் தமிழ் சினிமாவில் 2006 ஆம் ஆண்டு வெளியாகிய கேடி திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார்.

அதன் பிறகு தமிழில் விஜய் நடித்து ஹிட்டான நண்பன் திரைப்படத்தில் நடித்திருந்தார், இவரை தமிழ் சினிமாவில் பார்ப்பது அரிது தான் ஏனென்றால் இவர் தமிழில் அதிக படம் நடிக்கவில்லை ஆனால் தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார், அதுமட்டுமில்லாமல் இந்தி சினிமாவிலும் நடித்துள்ளார்.

இவரின் சமீபத்தில் ஒரு புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள் ஏனென்றால் இவர் மிகவும் ஒல்லியாக தான் இருப்பார் ஆனால் அந்த புகைப்படத்தில் உடல் பருத்து மிகவும் குண்டாக இருந்தார், இந்த நிலையில் தற்போது ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது இந்த புகைப்படத்தில் இலியானா ஒல்லியாக மாறியுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் இனிய நான் திரும்பவும் வந்து விட்டார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

