தாத்தாவைப் போல் இசையில் ஆர்வம் காட்டும் இளையராஜாவின்.!பேத்தி வைரலாகும் வீடியோ காணொளி.!

0

தமிழ் சினிமா உலகில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் இளையராஜா இவரது பாடல்களைக் கேட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும் என்றுதான் கூற வேண்டும் அதிலும் குறிப்பாக இவர் எந்த திரைப்படத்திற்கு பாடல்கள் இசை அமைத்தாலும் அந்த திரைப்படத்தில் ஒரு பக்தியோடு பாடல்களை பாடுவார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

தற்போது உள்ள இசையமைப்பாளர்கள் திரைப்படங்களில் தனது இசையை ரசிகர்களுக்கு அபூர்வமாக காட்ட வேண்டும் என துடித்து வருகிறார்கள் ஆனால் இவர் எந்த திரைப்படத்தில் இசையமைத்தாலும் அந்த திரைப்படம் கண்டிப்பாக ஹிட்டாகி விடும்.

மேலும் இவரது மகன் என்ற அடையாளத்தோடு பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா இவரும் பல திரைப்படங்களில் இசையை அமைத்து ரசிகர்களிடையே புகழ்பெற்று விளங்கி வருபவர் அதிலும் குறிப்பாக இவர் தற்போது பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

அதேபோல் இசைஞானி இளையராஜாவும் துப்பறிவாளன் 2,விடுதலை போன்ற திரைப்படங்களுக்கு இசை அமைக்க ஒப்புக் கொண்டுள்ளார்.இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா மகள் ஜியா அவருக்கு இசைஞானி இளையராஜா இசை சொல்லிக் கொடுக்கிறார்.

ஒரு சில நிமிடம் மட்டும் தனது பேத்தியுடன் இளையராஜா ஒரு டியூன் ஒன்றை சொல்லிக் கொடுக்கும் பொழுது எடுத்த வீடியோ காணொளி ஆனது தற்போது சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.மேலும் இந்த வீடியோ பார்த்த இவரது ரசிகர்கள் பலரும் இந்த வீடியோ காணொளியை சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.