23 வருடத்திற்கு பிறகு மீண்டும் பிரபல நடிகருடன் இணையும் இளையராஜா.! இப்போ இவங்க கூட்டணி எடுபடுமா..

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் நடித்தால் ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் என கங்கணம் கட்டிக்கொண்டு வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் அந்த லிஸ்டில் இடம் பிடித்தவர் தான் ராமராஜன் இவர் நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என கிடைத்த வாய்ப்பை எதையும் ஏற்றுக் கொள்ளாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் தற்பொழுது ஹீரோவாக சாமானியன் என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரைக்கு வர இருக்கிறார்.

நடிகர் ராமராஜன் 80 காலகட்டத்தில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்தவர் இவர் நடித்த திரைப்படத்திலிருந்து வெளியான பாடல்கள் இன்று வரை ரசிகர்களின் ஃபேவரைட் என்று கூறலாம் அந்த அளவு ரசிகர்களை மெய் மறந்து கேட்க தூண்டியது. இந்த நிலையில் சிறிது காலம் சினிமாவில் இருந்து வெளியேறிய ராமராஜன் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார் சாமானியன் என்ற திரைப்படத்தின் மூலம் தான் மீண்டும் திரைக்கு வர இருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் எம் எஸ் பாஸ்கர் ராதாரவி ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள் அது மட்டுமில்லாமல் சாமானியன் திரைப்படத்தின் அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்பு தான் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்கள் மேலும் ராமராஜன் நடிக்கும் சாமானியன் திரைப்படத்தை தமிழ் தெலுங்கு ஹிந்தி உட்பட பல மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

தற்பொழுது வரை 60% படம் எடுத்து  முடிவடைந்த நிலையில் சாமானியன் திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது ராமராஜனின் கரகாட்டக்காரன் எங்க ஊரு பாட்டுக்காரன் ஆகிய திரைப்படங்களுக்கு இசைஞானி இளையராஜா தான் இசையமைத்தார் இந்த பாடல்கள் இன்று வரை ரசிகர்களுக்கு பிடித்த பாடலாக அமைந்துள்ளது.

இளையராஜா மற்றும் ராமராஜன் கூட்டணி 23 வருடங்களுக்குப் பிறகு இந்த திரைப்படத்தின் மூலம் இணைய இருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள் ஏனென்றால் இந்த படத்தில் பழைய காலத்து ஸ்டைலில் பாடல் வெளியாகும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில்  இந்த திரைப்படத்தின் இயக்குனர் ஆர் ராகேஷ் சமீபத்தில் ஒரு பேட்டியில் சாமானியன் திரைப்படத்திற்கு ஏற்ற கதாநாயகனாக மனதில் தோன்றியவர் ராமராஜன் தான். இதுவரை 60% பட பிடிப்பு முடிந்து விட்டது ராமராஜன் ராதாரவி எம்எஸ் பாஸ்கர் மூவரும் போட்டி போட்டுக் கொண்ட காட்சிகளை இயக்குவது எனக்கு கிடைத்த பாக்கியம் என  கூறியுள்ளார்.

அதேபோல் பிரபல ஒலிப்பதிவாளர் ரவிவர்மன் ஒரு அருமையான பாடலை எழுதியுள்ளார். கவிஞர் சினேகனும் அழகான பாடல் ஒன்றை கொடுத்துள்ளார் இப்படத்திற்கு இசை ஞானி இளையராஜா இசையமைக்கு ஒப்புக்கொண்டது படத்திற்கு இன்னும் மதிப்பு அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment