பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஐக்கி பெர்ரி தன்னுடன் விளையாடிய சக போட்டியாளர் வீட்டிற்கு சென்று புகைப்படம் எடுத்துக்கொண்டார் – இதோ நீங்களே பாருங்கள்.

சின்னத்திரை தொலைக்காட்சி டிஆர்பி ரேட்டை தக்க வைத்துக்கொள்ளவும் அதேசமயம் முன்னேறவும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சிகளை சீசன் செய்ததாக நடத்தி வருகிறது அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் நான்கு சீசன் களை நடத்தி அசத்தியுள்ளது.

ஐந்தாவது கட்ட  சீசனையும் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பிக் பாஸ் 5 இதுவரை 60 நாட்களை தாண்டி நிலையில் பல்வேறு போட்டியாளர்கள் வெளியே சென்றுள்ளனர் 3 போட்டியாளர்கள்  வைல்ட் கார்டு மூலம் உள்ளே வந்தனர் அதிலும் ஒருவர் அபிஷேக் கடந்த வாரம் வெளியேறினார்.

அதற்கு முந்தைய வாரம் ஐக்கி பெர்ரி குறைந்த ஓட்டுகளை வாங்கிய வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது இவர் பெரிதளவு சண்டை போடாமல் வீட்டில் தான் உண்டு எனக் இருந்து கொண்டு மக்களை மகிழ்வித்து வந்தவர் ஆனால் போகப்போக இவரது செயல்பாடுகள் ரொம்ப கம்மியாக இருந்த காரணத்தினாலேயே வெளியேற்றப்பட்டார்.

இருப்பினும் ரசிகர்கள் தற்போது ஐக்கி பெர்ரியை மிஸ் பண்ணி தான் வருகின்றனர் வெளியே சென்ற அவர் சமூக வலைத்தளத்தின் மூலம் ரசிகர்களுக்கு பிக் பாஸ் வீட்டில் நடந்த சில தகவல்களை பகிர்ந்து வந்தார். இந்த  நிலையில் தற்போது ஐக்கி பெர்ரி பிக்பாஸ் வீட்டில் தனது நெருங்கிய நண்பராக இருந்த இமான் அண்ணாச்சி வீட்டிற்கு சென்று.

bigboss-iyyki-berry

அவரது குடும்பத்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததோடு மட்டுமல்லாமல் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படங்கள் இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருகின்றன மேலும் ஐக்கி பெர்ரி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர் இதோ அந்த அழகிய புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.

bigboss-iyyki-berry
bigboss-iyyki-berry

Leave a Comment

Exit mobile version