பிரபல நடிகருக்கு வாழ்த்து சொன்ன விஜயின் மகள் வைரலாகும் புகைப்படம்.

தமிழ் சினிமாவில் தளபதி என்று அனைவராலும்  அன்புடன் அழைக்கப்பட்டு வரும் நடிகர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு வில்லனாக விஜய் சேதுபதியும், ஹீரோயினாக மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, போன்ற இன்னும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் ஊரடங்கு முடிந்ததும் ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் விஜய்க்கு சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா என்ற இரண்டு 2 பிள்ளைகள் உள்ளன. விஜயின் மகள் திவ்யா சாஷா வெளிநாட்டில் படித்து வருகிறார். திவ்யா சாஷா அவர் அப்பாவுடன் இணைந்து தெறி  திரைப்படத்தில் நடித்திருக்கிறார். தெறி திரைப்படத்தில் கிளைமாக்ஸ் சீனில் இவர் நடித்துள்ளார்.

விஜய் தற்போது நடித்து முடித்திருக்கும் திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தில் முதன் முதலில் சாந்தனு அவர்கள் விஜயுடன் இணைந்து நடித்துள்ளார்.

விஜய் மகள் திவ்யா சாஷா நடிகர் சாந்தனுவுக்கு சமீபத்தில் ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். இந்த ட்விட்டை பார்த்துதான் விஜய் மகளுக்கு ட்விட்டரில் கணக்கு இருப்பதே ரசிகர்களுக்கு தெரியவந்தது. விஜய் மகளின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

.

divya
divya

Leave a Comment