லியோ படத்தில் விஜய்க்கு மொத்தம் 30 ஹேர் ஸ்டைல்.! கிண்டல்களுக்கு மத்தியில் வெளியான சூப்பர் அப்டேட்..

நடிகர் விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்தவரும் நிலையில் இந்த படத்தில் இவருடைய ஹேர் ஸ்டைல் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக விஜய் இணைந்து லியோ படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கு முன்பு இவர்களுடைய கூட்டணியில் மாஸ்டர் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றினை கண்டது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது லியோ படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தில் சஞ்சய் தத் ,அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

தொடர்ந்து காஷ்மீரில் இருந்து படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் பட குழுவினர்கள் தீவிரமாக கண்காணிக்க தனி ஒரு டீமை அமைத்துள்ளனர். இவ்வாறு பாதுகாப்புகளுக்கு நடுவிலையோ படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்போதைய படம் குறித்த சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது லியோ படத்தில் விஜயின் ஹேர் ஸ்டைல் குறித்து ரசிகர்கள் பலரும் கிண்டல் செய்து வரும் நிலையில் தற்போது அவருடைய ஹேர் ஸ்டைல் குறித்து தான் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது லியோ படத்தில் நடிகர் விஜய் வித்தியாசமான கோணத்தில் காட்ட வேண்டும் என்பதற்காக 30-க்கும் மேற்பட்ட ஹேர் ஸ்டைல் தயார் செய்யப்பட்டதாம் அதில் விஜய் ஒன்றை தேர்வு செய்து வைத்துள்ளார்.

அந்த ஸ்டைலில் தான் தற்பொழுது விஜய் நடித்து வருவதாகவும் விஜய்க்கு லோகேஷ் கனகராஜ் தேர்வு செய்துள்ள ஹேர் ஸ்டைல் ரொம்பவே பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது இருந்தாலும் சமூக வலைதளத்தில் விஜயின் ஹேர் ஸ்டைலை மிகவும் கிண்டல் செய்து வருகின்றனர்.

Leave a Comment