விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் இந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற பலரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருகிறார்கள். மேலும் இந்த நிகழ்ச்சி சினிமாவில் பிரபலமடைய முடியாமல் தவித்து வரும் பலருக்கும் உதவியாக இருந்து வருகிறது.
அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த பிரபலம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார். இப்படிப்பட்ட நிலையில் அவர் நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்த ஒருவர்தான் தாமரைச் செல்வி. இவர் இந்நிகழ்ச்சியில் வெற்றி பெறவில்லை என்றாலும் இறுதிவரை இருந்து விளையாடினார் மேலும் சக போட்டியாளர்களிடம் சண்டை போட்டாலும் உடனே அவர்களுடன் சமாதானப்படுத்தி கொண்டதால் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல பாராட்டு கிடைத்தது மேலும் நல்ல குணம் உடையவராக பலரும் இவரை பார்த்து வந்தார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் மேலும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் தன்னுடைய கணவருடன் கலந்துக் கொண்டு நடனமாடியிருந்தார் இப்படிப்பட்ட நிலையில் தற்போது தாமரைச்செல்வி ஒரு திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்பட்டு வந்துள்ள நிலையில் அவர் நடிக்கும் படத்தினை பற்றி அதிகாரபூர்வமான தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது இவர் ஆழி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் சரத்குமார் ஹீரோவாக நடிக்க தாமரை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. தெருக்கூத்து ஆடிவந்த தாமரைச்செல்விக்கு தற்பொழுது திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டு வருகிறது.