ஆக்‌ஷன் கதைகள் வேணாம் இந்த மாதிரி இருந்தால் நான் நடிக்க ரெடி பிரபல இயக்குனருடன் கூறிய தல அஜித்.

I am ready to act with the famous director Thala Ajith : தமிழ் சினிமா உலகின் ஆரம்பத்தில் பல தோல்விகளை சந்தித்து வந்த தல அஜித் தவற தற்போது தமிழ் சினிமா அவரை  உச்சத்தில் தூக்கி வைத்து அழகு பார்த்து வருகிறது அதற்கு காரணம் தல அஜித் அவர்கள் தனது கடின உழைப்பால் சினிமா உலகில் இவ்வாறு வளர்ந்துள்ளார் அதை நாம் அனைவரும் அறிந்ததே.

தற்பொழுது இவர் தமிழ் சினிமாவிற்கு பல சிறப்பான வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் அதற்கு முக்கிய காரணம் சிறந்த இயக்குனர்கள் மற்றும் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தது வருவதன்  விளைவாக தற்போது அவர் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு மேலும் பிடித்துப்போன நபராக இருந்து வருகிறார்.

இவர் கடந்த ஆண்டு சிறப்பான படங்களை கொடுத்தை  தொடர்ந்து தற்போது ஹச். வினோத்துடன் இணைந்து வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார் அஜித். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கொரோனா பிரச்சினை காரணமாக தள்ளிிவைக்கப்பட்டுள்ளது.இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் அல்லது அதன்பிறகு தொடங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் அஜித் பற்றிய செய்துகொண்டு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அது என்னவென்றால் அஜித் அவர்கள் தற்போது ஒரே மாதிரியான ஆக்‌ஷன் மற்றும் சண்டைக் காட்சிகள் நிறைந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அது மிகவும் போர் அடித்ததால் செம்ம ஜாலியாக மற்றும் ஃபன்னாக இருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் சிறப்பாக இருக்கும் என பிரபல இயக்குனருடன் கூறியுள்ளாராம் அந்த இயக்குனர் வேறு யாருமில்லை வெங்கட்பிரபு தான்.

அவர் வெகு விரைவில் அஜித்திற்கு செம்ம ஜாலியாக இருக்கும் ஒரு கதையை ரெடி பண்ணி அவருடன் சேர்ந்து இணைவார் என கூறப்படுகிறது இருப்பினும் அஜித் அவர்கள் ஒரு படம் பாதியில் இருப்பதால் வேறு எந்த படத்திலும் கமிட் ஆக மாட்டார் ஆனால் இப்படம் முடிந்த பிறகு தான் நமக்கு தெரியும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment