ரஜினிக்கு தங்கையாக நடித்தால்.. வரலாற்று படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த கீர்த்தி சுரேஷ்.! இப்ப வருத்தப்பட்டு என்ன பண்ணுறது.! போச்சா..

0
rajini-and-kerthy-suresh
rajini-and-kerthy-suresh

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த தீபாவளி அன்று வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அண்ணாத்த இந்த திரைப்படம் கிராமத்து கதை என்பதால் ரஜினி இந்த திரைப்படத்தில் எதார்த்த நடிப்பு திறமையை வெளிப்படுத்தி அசத்தினார் படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது ஆனால் பெரும்பாலும் இது ரசிகர்களை கவரவில்லை.

காரணம் வழக்கம் போல அண்ணன் – தங்கை சென்டிமென்ட் அதிகம் வருவதால் ரசிகர்களுக்கு பார்த்து பழக்கப்பட்டது போல் இருந்ததால் பெரிதளவு பிடிக்கவில்லை என ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது ஆனால் இல்லத்தரசிகளை இந்த படம் வெகுவாக கவர்ந்துள்ளது மக்கள் கூட்டம் திரையரங்கம் நாடிய வண்ணமே இருகின்றனர். இந்த திரைப்படம் இதுவரை 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்ணாத்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கைகோர்த்து நயன்தாரா, மீனா, குஷ்பு, அபிமன்யு சிங், பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு மற்றும் கீர்த்தி சுரேஷ் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த திரைப்படத்தில் நடித்து இருந்தனர் தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் டாப் நடிகை என்ற அந்தஸ்தையும் தூக்கி எறிந்துவிட்டு டாப் நடிகர்கள் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் இந்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்தார் தெலுங்கில் சிரஞ்சீவி தங்கையாக தற்போது நடித்து வருகிறார் ஒரு பக்கம் இருந்தாலும் பல்வேறு இடங்களிலும் இவருக்கு நடிக்க வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கிறது இதனால் தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நாயகியாக விஸ்வரூபம் எடுத்து உள்ளார் இப்படி இருக்கு ஆனால் ஒரே ஒரு படத்தை மட்டும் அவர் தவறவிட்டு உள்ளாராம்.

அந்த படம் பேரு அதுவும் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படம் தான் இந்த படத்தில் அவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது ஆனால் அப்பொழுது ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை அவர் இழந்து உள்ளதாக கூறப்படுகிறது.