உங்களால் முடிந்தால் இந்த பிரபல நடிகை யார் என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.!! சின்ன வயசுல அட்டைப் படத்திற்கு போஸ் கொடுத்த நடிகை.

find out the famous actress: உலகம் முழுதும் பரவி வரும் கொரோனா வைரஸின் காரணமாக இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது வீட்டிலேயே முடங்கி உள்ள திரை பிரபலங்கள் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அந்த வகையில் தெலுங்கு முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா சமூக வலைதளங்களில் உரையாடி வருகிறார். ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சற்றும் மனம் நோகாமல் பதிலளித்து வருகிறார். இவருக்கு தெலுங்கு மட்டுமில்லாமல் தமிழிலும் ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் சிறு வயதில் இருக்கும் போது கோகுலம் புத்தகத்தின் அட்டை படத்திற்கு கொடுத்த புகைப்படத்தை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படம் 2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும்.

அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை எடுக்கும்போது நடந்த ஷூட்டிங் இன்னும் அவருக்கு ஞாபகம் இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். இது எல்லாம் இன்று உங்கள் அன்பை பெரும் வகையில் வைத்து இருக்கிறது என்று நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

அதை தொடர்ந்து பின்னர் அந்த அட்டைப் படத்திற்கு அவர் கொடுத்திருந்த போஸ் போலவே தற்போதும் போஸ் கொடுத்து இந்த படத்தையும் இன்ஸ்டாகிராமில் இணைத்து பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

rashmika-tamil360newz
rashmika-tamil360newz

 

 

Leave a Comment