நமது கடையில் பிரியாணி, புரோட்டா வாங்கினால் மாஸ்க், சானிடைசர் இலவசம்.! மதுரையில் பிரபல ஹோட்டல்

0

Madurai Hotel : தற்பொழுது சென்னையில் எப்படி கொரோனா பரவல் அதிகரிப்பு வருகிறதோ அதே போலவே மதுரையிலும் கொரோனா தோற்று அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இந்த நிலையில் மதுரை சேர்ந்த ஹோட்டல் கடைக்காரர் மதுரை மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அதிரடியான சில முடிவுகளை எடுத்துள்ளார்.

அந்த வகையில் தனது ஹோட்டளில் சிக்கன், மட்டன் பிரியாணி, புரோட்டா வாங்கினால் அவர்களுக்கு மாஸ்க் மற்றும் சன்டிசர்கள் வழங்கப்படும் என அதிரடியாக அறிவித்து இருந்தார். அதுமட்டுமல்லாமல் அதனுடன் கொரொனா தோற்று  பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக மாத்திரைகளையும் வழங்குகிறார்.

அந்த வகையில் அவரிடம் இதனைப் பற்றி கேட்கும்பொழுது சென்னையை அடுத்து மதுரையில் தான் அதிகமாக கொரோனா பரவல் இருந்து வருகிறது எனவே என்னுடைய சொந்தப் பணத்தில் 50 ஆயிரத்திற்கு மாஸ்க்குகள், கிருமி நாசினிகள், மாத்திரைகள் ஆகியவற்றை வாங்கி வைத்துள்ளேன்.

எனது ஹோட்டலில் சிக்கன், மட்டன், பரோட்டா மற்றும் பிரியாணி வாங்கும் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும் என்று கூறியிருந்தார் அதுமட்டுமல்லாமல் மதுரை மக்களை முழுமையாக கொரோனவில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்பதே எனது குறிக்கோள் என்றும் தெரிவித்திருந்தார்.

இதனை அறிந்த பலரும் அவர் கடையில் உணவுப் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர் அதுமட்டுமல்லாமல் இதனை அறிந்த தன்னார்வலர்கள் பலரும் இவரை பாராட்டி வருகின்றனர்.