பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் கேட்டால் இனி இதை செய்யுங்கள்..! நடிகைகளுக்கு ஐடியா கொடுக்கும் சீரியல் நடிகை..!

தற்போது சினிமா துரை மட்டுமில்லாமல் பல்வேறு துறைகளிலும் பெண்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கிறது அந்த வகையில் இந்தப் பிரச்சனைகள் பலவற்றையும் எதிர்கொண்டு பெண்கள் போராடுவது ஒரு மிகப்பெரிய போராட்டமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் பிரபல தனியா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஆபீஸ் மற்றும் தேவதை போன்ற பல்வேறு செய்திகளில் நடித்த பிரபலமான நடிகை தான் ஜீவிதா இவர் சமீபத்தில் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் மாறன் கடைக்குட்டி சிங்கம் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

அது மட்டும் இல்லாமல் நமது நடிகை பல்வேறு பட வாய்ப்புக்காக அலைந்துள்ளாராம் அப்பொழுது அவர் பட வாய்ப்பு கேட்டு செல்லும் ஒவ்வொருவரிடமும் இருந்து வரும் கேள்வி என்னவென்றால் நீங்கள் கிளாமராக நடிப்பீர்களா என்றுதான் கேட்கிறார்கள். மேலும் நமீதா நடிக்க வேண்டிய ரோல் உங்களுக்கு தருகிறோம் நீங்கள் குட்டையான ஆடை அணிந்து கொண்டு நடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்கள்.

ஆனால் இது போன்ற  வாய்ப்புகளை நான் ஒருபோதும் ஏற்க மாட்டேன் என்று கோபத்துடன் கூறியது மட்டும் இல்லாமல் சில விஷயங்களை அவர் கூறியுள்ளார் பெண் கவர்ச்சியாக நடித்தால் மட்டும்தான் சினிமா வெற்றி பெறுமா என்று கேள்வி எழுப்பியது மட்டும் இல்லாமல் கவர்ச்சி இல்லாமல் நல்ல கதை அம்சம் கொண்ட திரைப்படங்களும் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் சின்னத்திரை மட்டுமின்றி பெரிய திரைகளிலும் பல்வேறு வகையில் நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கிறது இவ்வாறு ஏற்படும் சம்பவத்தின் இப்போது நடிகைகள் அதனை தைரியமாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் மட்டுமே இவற்றை முற்றிலுமாக மாற்ற முடியும் என கூறியுள்ளார்.

Leave a Comment