தளபதி விஜய் ஒன்னும் சூப்பர் ஸ்டார் கிடையாது..! தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்றால் இந்த ஒரு நடிகர்தான் சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகர்..!

0

இந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து கட்டில் போட்டு அமர்ந்து இருப்பவர்தான் தளபதிவிஜய் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்துமே மாபெரும் ஹிட் கொடுப்பது மட்டுமில்லாமல் வசூலிலும் வெளுத்து வாங்கி வருகிறது.

இந்நிலையில் மலையாளத்தில் பிரபல நடிகராக வலம் வரும் ஒருவர் தளபதி விஜய் சூப்பர் ஸ்டாரும் கிடையாது ஒன்னும் கிடையாது என கூறியது சமூக வலைதள பக்கத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல் விஜய் ரசிகர்களை கோபத்தில் உள்ளாகிவிட்டது.

இந்நிலையில் மலையாள பட நடிகர் சித்திக்  சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய பொழுது மலையாளத்தில் பிரபல நடிகராக வலம் வரும் மோகன்லால் மற்றும் மம்முட்டி இவர்களை சூப்பர்ஸ்டார் என்று கூறிவருகிறார்கள். ஆனால் தமிழ் சினிமா கொஞ்சம் மாறுபட்டதாக இருக்கிறது.

அந்தவகையில் தளபதி விஜய் ஒரு சிறந்த நடிகர் கிடையாது ஆனால் அவருக்கு கொடுக்கப்பட்ட பட்டத்தின் காரணமாக சூப்பர் ஸ்டார் என அனைவரும் அழைத்து வருகிறார்கள் மேலும் அவர் இந்த அளவிற்கு பிரபலமானது இந்த பட்டத்தின் காரணமாக தான் என சித்திக் கூறியுள்ளார்.

siddhik-1
siddhik-1

பொதுவாக தமிழ் சினிமாவைப் பொருத்தவரை சூப்பர் ஸ்டார் என்று கூறப்பட்டால் அது கமலஹாசனை மட்டும் தான் சொல்ல முடியும் மற்ற எந்த நடிகரையும் இந்த இடத்தில் வைத்து பார்ப்பது மிகவும் கடினமான செயல் இவ்வாறு அவர் பேசியது சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

அதேபோல சிவாஜி கணேசனை தொடர்ந்து அனைத்து கதாபாத்திரத்திலும் நடித்து தன்னுடைய புகழை உயர்த்தியவர்தான் கமலஹாசன் இவ்வாறு சிவாஜி கணேசன் இடத்தை பூர்த்தி செய்தவரும் கமலஹாசன் தான் வேறு எந்த ஒரு நடிகரையும்  அவருடன் ஒப்பிட்டுக் கூற முடியாது.