என்னுடைய படத்தில் நடித்தால் அந்த வேலையை மட்டும் தான் நீ பாக்கணும்.? வேற எந்த படத்திலும் கமீட் ஆககூடாது.? கிடுக்குபிடி போட்ட இயக்குனர் ஷங்கர்.? தவிக்கும் ஹீரோ.

திரை உலகில் எடுத்தவுடனேயே மிகப் பெரிய பட்ஜெட் படங்களை பிறகு அதில் வெற்றி கண்டதால் தற்போது இந்திய அளவில் கவனத்தை ஏற்படக்கூடிய இயக்குனர்களில் ஒருவராக உள்ளார் இயக்குனர் ஷங்கர். தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக வலம் வரும் சங்கர் இதுவரை குறைந்த திரைப்படங்களை எடுத்து உள்ளார் ஆனால் அந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மிக பெரிய பட்ஜெட் படங்கள் மட்டும் அல்லாமல் திரைப்படங்கள் வெளிவந்து அதைவிட பல கோடி லாபம்  பார்த்துள்ளது.

குறைந்த திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் மக்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாடும் இயக்குனராக சங்கர் இருந்து வருகிறார் இதுவரை விஜய், ரஜினி, கமல் போன்ற டாப் பிரபலங்களை வைத்து பல ஹிட் படங்களை கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியன் படத்தின் வெற்றியை தொடர்ந்து கமலை வைத்து இந்தியன் இரண்டாம் பாகத்தை எடுக்க முயற்சி செய்தார். ஆரம்பத்தில் விறுவிறுப்பாக சென்றாலும் ஒருகட்டத்தில் பல சர்ச்சைகளை சந்தித்தது படக்குழு.

ஆனால் இயக்குனர் அந்த படத்தை விட்டுவிட்டு தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தி பக்கம் அடியெடுத்து வைத்துள்ளார் முதலில் தெலுங்கில் ராம்சரணை வைத்து ஒரு படத்தை எடுக்கிறார். ஏற்கனவே ராம்சரன் ஷங்கருக்கு ஒரு நிபந்தனை விதித்துள்ளார் அதாவது எனது படத்தை எடுத்து முடிப்பதற்குள் மற்ற வேறு எந்த படத்தையும் இயக்கவும் கூடாது என நிபந்தனை விதித்தார்.

அதனையடுத்து தான் படம்  தற்போது உருவாகி வருகிறது இந்த நிலையில் ராம் சரணுக்கு பல்வேறு இயக்குனர்கள் கதை சொல்லி தற்போது வாய்ப்புகளை கொடுக்கின்றனர் ஆனால் இயக்குனர் ஷங்கர் ஒரு புதிய நிபந்தனை அவருக்கு போட்டுள்ளார்.

அதாவது எனக்கு நீண்ட காட்சி தேவை என்பதால் நீங்கள் படப்பிடிப்பு முடியும் வரை வேறு எந்த ஒரு படத்திலும் நடிக்கக்கூடாது என ஒப்பந்தம் வாங்கியுள்ளாராம். ஆனால் ராம்சரண் தற்போது சற்று வருத்தத்தில் இருக்கிறாராம் ஏனென்றால் முன்னணி இயக்குனர்கள் பலரும் கதைசொல்லியும் தற்பொழுது நடிக்க முடியாமல் இருக்கிறாராம்.

Leave a Comment