இயக்குனரும், நடிகருமான எஸ் ஜே சூர்யா தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருகிறார்கள். சமீபத்தில் கூட வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தி இருந்தார். திரைப்படத்தை தொடர்ந்து பல்வேறு இயக்குனரிடம் கதையை கேட்டு கமிட்டாகி வருகிறார்.
மாநாடு திரைப்படம் பிரமாண்ட வெற்றி பெற்றதை தொடர்ந்து இரண்டு கோடியை அதிகமாக உயர்த்தி தற்போது ஒரு படத்திற்கு 6 கோடி சம்பளமாக வாங்க இருக்கிறார் எஸ் ஜே சூர்யா. இந்த நிலையில் டிசம்பர் 27 தேதி முதல் நடந்து வரும் சர்வதேச திரைப்பட விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இதில் மொத்தம் 53 நாடுகள் பங்கேற்கும் இந்த விழாவில் பங்கேற்ற இயக்குனர் எஸ் ஜே சூர்யா அங்கு விஜய் குறித்து பேசியுள்ளார் அதில் அவர் சொன்னது : விஜய் சார் பற்றி நான் என்ன சொல்வது தமிழகத்திற்கே தெரியும் இப்போது தெலுங்கு பக்கமும் தெரியப்போகிறது.
அவர் வம்சி இயக்கத்தில் தனது 66 வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய் சார் ரொம்ப சின்சியரான நடிகர் காசு முக்கியம் கிடையாது . அவர் வாழ்க்கையில் எவ்வளவோ சம்பாதித்து விட்டார் எவ்வளவோ பார்த்து விட்டார் அவர் நினைத்தால் படப்பிடிப்பு தளத்திற்கு 11மணிக்கு கூட வரலாம் யாரும் ஒன்றும் கேட்க மாட்டார்கள்.
அவர் படப்பிடிப்பு என்று வந்துவிட்டால் சொன்ன நேரம் 7 மணி என்றால் 6:55 எல்லாம் மேக்கப்மேன் உடன் ரெடியாக இருப்பார் சினிமாவை பொறுத்தவரை சின்சியாரிட்டியில் விஜயை அடிச்சிக்க ஆளே இல்லை என சொல்லி பாராட்டினார் எஸ் ஜே சூர்யா. இச்செய்தி தற்போது இணைய தளப் பக்கத்தில் வைரலாகி வருகிறது.