விஜய் சேதுபதி ஓகே சொன்னா சூது கவ்வும் 2 ரெடி என்று கூறிய இயக்குனர் நலன் குமாரசாமி!!

0

Director nalan kumarasamy ready to take suthu kavvum part 2 movie: சூது கவ்வும் 2 படத்தை இயக்க தயாராக இருக்கும் இயக்குனர் நலன் குமாரசாமி. இவர் கலைஞர் தொலைக்காட்சியில் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் குறும்படங்கள் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர். இவர் இயக்கிய தோட்டா விலை என்ன, ஒரு படம் எடுக்கணும், நெஞ்சுக்கு நீதி போன்ற குறும்படங்கள் மக்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதனைதொடர்ந்து அவர் சூது கவ்வும் என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன், ரமேஷ் திலக்’ கருணாகரன் மற்றும் சஞ்சிதா ஷெட்டி போன்றோர் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மேலும் இவர் எக்ஸ்,காதலும் கடந்து போகும் போன்ற படங்களையும் இயக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் பீட்சா, ஜிகர்தண்டா, எனக்குள் ஒருவன், கட்டப்பாவ காணோம், போன்ற படங்களில் நடித்துள்ளார்.  தீயா வேலை செய்யணும் குமாரு, மாயவன், சூப்பர் டீலக்ஸ்போன்ற படங்களில் எழுத்தாளராகவும் இருந்துள்ளார்.

தற்போது இவர் சூது கவ்வும் 2 படத்தை எடுக்க உள்ளதாக இருக்கிறார். படத்தில் நடிப்பதற்கு விஜய் சேதுபதி ஒப்புக்கொண்டால் போதுமென்று அவர் கூறியுள்ளார்.