தென்னிந்திய திரையுலகில் எடுத்தவுடனேயே டாப் நடிகர்கள் படங்களை கைப்பற்றி சிறப்பாக ஜொலித்த சுருதிஹாசன் சமீபகாலமாக தெனிந்திய சினிமாவில் உள்ள எந்த படங்களும் நடிக்காமல் இருந்து வருகிறார்.
இருப்பினும் தன்னை ஏற்று வரும் படங்களில் அவ்வப்போது தற்போது தலைகாட்டி வருகிறார். அந்த வகையில் இவர் விஜய் சேதுபதி நடிப்பில் ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள லாபம் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அதன் பிறகு இவரது கையில் படங்கள் இருக்கிறதா இல்லையா என்று கூட தெரியாமல் இருந்து வருகிறது இப்படி இருக்க சமீபத்திய சமூக வலைதள பேட்டி ஒன்றில் சுருதிஹாசன் கூறியுள்ளது. நான் லாபம் படம் நடிக்கும் பொழுது இயக்குனர் ஜெகநாதன் இடம் கம்யூனிஸ்ட் பற்றி நிறைய தெரிந்து கொண்டேன்.
மேலும் எனது தங்கையை அக்க்ஷர ஹாசன் நடிப்பையும் தாண்டி இயக்குவதில் அதிகம் ஆர்வம் காட்டுகிறார் அது எனக்கு பெருமிதம் மேலும் அவர் நல்ல சிறப்பம்சம் உள்ள கதைக்கு எண்ணை கூப்பிட்டால் நிச்சயம் நடிப்பேன் என தெரிவித்தார்.

எனது அப்பா கமலஹாசன் அவர்கள் தற்போது லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் உருவாகி “விக்ரம்” திரைப்படத்தை தயாரித்து அவரே நடிக்க உள்ளார் ஆனால் அந்த திரைப்படத்திலிருந்து எனக்கு இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை என வெளிப்படையாக கூறினார்.