இது மட்டும் நடந்துடுச்சினா நடிகை சமந்தா தான் அடுத்த லேடி சூப்பர் ஸ்டார்.!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் சமந்தா தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் இப்படி ஒரு சாதனையை செய்து விட்டால் சமந்தா தான் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதாவது நடிகை சமந்தா தற்பொழுது யசோதா திரைப்படத்தில் நடித்த முடித்துள்ளார் இந்த திரைப்படம் நவம்பர் இரண்டாம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்த படத்தினை ஹரி ஹரிஷ் இயக்கியுள்ளார் மேலும் இதனை தொடர்ந்து வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராம் ரமேஷ், முரளி ஷர்மா ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்த படத்தில் எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிகை சமந்தா நடித்துள்ளார். யசோதா படத்தினை சிவலிங்க கிருஷ்ண பிரசாத் தனது ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். மேலும் மணிஷர்மா இசையமைத்துள்ளார் இவ்வாறு இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

அதாவது நடிகை சமந்தா நடிப்பில் வெளியாகியுள்ள யசோதா திரைப்படம் நேரத்தில் இருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் இந்த படத்தில் போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகளில் அவரால் ஈடுபட முடியவில்லை. இந்த படம் வெளியான ஒரு வாரத்தில் ரூபாய் 20 கோடிக்கு மேல் வசூல் செய்தால் டோலிவூட்டில் சமந்தா தான் அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் என்று பேச்சு எழுந்துள்ளது.

மேலும் இதற்கு முன்பாக சமந்தா நடிப்பில் வெளிவந்த ஓ பேபி படம் முதல் வாரத்தில்  ரூபாய் 13 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் யசோதா படம் வெளியாகி 15 நாட்களைக் கடந்துள்ள நிலையில் ரூபாய் 33 கோடிக்கு மேல் வசூல் செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment