இந்த படம் வெற்றி பெறாவிட்டால் ஆக்க்ஷன் படங்களில் நடித்திருக்க மாட்டார் விஜய்.!

சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் தளபதி விஜய்.இவர் நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். இவர் இதற்கு முன்பு சட்டம் ஒரு விளையாட்டு, நான் சிவப்பு மனிதன், வெற்றி ஆகிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக திறையில் தோன்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரின் ஆரம்பகால படங்கள் பெரும் தோல்வியைச் சந்தித்தன. இதனால் அவரை சினிமாவில் நடிக்க வைக்க வேண்டாம் என ஒரு பெரும் பரபரப்பு. இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் விஜய் அவர்கள் தனது நடிப்பை மேம்படுத்தும் விதமாக அடுத்தடுத்த படங்களில் தனது திறமையை வெளிக்காட்டி வந்துகொண்டிருந்தார். ஆரம்பகால படங்களில் இவர் காதல் கலந்த திரைப்படங்களிலேயே அதிகமாக நடித்து வந்ததால் இவரது ரசிகர்கள் குறைய தொடங்கினார்.

இதை உணர்ந்த விஜய் அவர்கள் ஆக்ஷன் போன்ற படங்களில் நடித்தால் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்ள முடியுமென அவர் நினைத்தார். இதன் மூலமாகவே, அவர் கடந்த 2002 ஆம் ஆண்டு பகவதி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் முழுக்க முழுக்க ஆக்க்ஷன் கலந்த படமாக அமைந்தது.

ஆனால் இப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை இதனையடுத்து அவர் ரமணா இயக்கிய திருமலை என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதன் மூலம் இவர் தனது ரசிகர்களுக்கும் மற்ற மக்களுக்கும் தனக்கும் ஆக்க்ஷன் வரும் என்பதை வெளிப்படுத்தினார். இப்படம் தியேட்டர்களில் வெளிவரும் போதே டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் அலை மோதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

thirumalai
thirumalai

இதைத்தொடர்ந்து தளபதி விஜய் அவர்கள் தொடர்ந்து ஆக்க்ஷன் போன்ற கதைகளை தேர்ந்தெடுத்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மேலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். குறிப்பாக கில்லி, மதுர, திருப்பாச்சி, சிவகாசி, வேட்டைக்காரன் போன்ற படங்களாகும். இத்தகைய சிறந்த திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அழியா இடத்தைப் பிடித்துக் கொண்டார் தளபதிவிஜய்.அதிலிருந்து தற்போது வரை ஆக்ஷன் கலந்த படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment