இந்த 12 நிமிட காட்சி இருந்தா படம் பல்பு தான் வாங்கும்.! வெட்டி எறிங்க பிரின்ஸ் திரைப்படத்தில் அதிரடியாக நீக்கப்பட்ட காட்சி

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் தற்போது பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் 21ஆம் தேதி அதிகாலை 5மணி முதல் திரையிடப்பட உள்ளது அதுமட்டுமல்லாமல் தீபாவளி என்பதால் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்தை கோலவாலமாக கொண்டாடத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதே சமயத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியாக உள்ள சர்தார் திரைப்படம் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இந்த இரண்டு படத்தின் மீது எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த இரண்டு படங்களும் முதன் முறையாக நேரடியாக மோத உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் பிரின்ஸ் திரைப்படத்திலிருந்து 12 நிமிட காட்சியை கட் செய்துவிட்டதாக கூறப்படுகிறது இந்த படம் இரண்டு மணி நேரம் 23 நிமிடம் ஓடக்கூடிய வகையில் உருவாகியிருந்தது ஆனால் இந்த படத்தில் இருந்து ஒரு சில காட்சிகளை அதாவது 12 நிமிட காட்சிகளை படக்குழு நீக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

ரசிகர்கள் எந்தவித காரணத்திற்காகவும் சோர்வாகக் கூடாது என்ற எண்ணத்தில் இந்தப் படத்தில் இருந்து 12 நிமிட காட்சியை நீக்கி விட்டு உள்ளதாக கூறப்படுகிறது அதனால் இந்த படம் இரண்டு மணி நேரம் 11 நிமிடம் என்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது அதில் முதல் பாதி ஒரு மணி நேரம் ஏழு நிமிடம் ஆகவும் இரண்டாம் பாதி ஒரு மணி நேரம் 3 நிமிடமாகவும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படம் குறித்து சிவகார்த்திகேயன் சமீபத்தில் பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது அந்த வீடியோவில் சிவகார்த்திகேயன் பேசியதாவது லவ் யூ ஆல் எனக்கு எல்லோரும் ஒத்துழைத்ததற்கு மிகவும் நன்றி எனவும் அதனால் நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

பிரின்ஸ் திரைப்படம் அனைவரும் பார்க்கக்கூடிய படமாகும் அதுமட்டுமல்லாமல் அனைவரும் குடும்பத்துடன் போய் பார்க்கலாம் இது ஒரு நகைச்சுவை மற்றும் காதல் திரைப்படம் என்பதால் அனைத்து குடும்பங்களும் சேர்ந்து பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.

Leave a Comment