இந்திய அணியில் வாய்ப்பு இல்லாதால்.. அமெரிக்கா பக்கம் ஓடும் இளம் வீரர்கள்.? யார் யார் தெரியுமா.?

இந்திய கிரிக்கெட் அணியில் சமீபகாலமாக இளம் நடிகர்களின் வரவேற்பு அதிகரித்துள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் அதற்கு விதையாக இருப்பது ஐபிஎல் மற்றும் u19 கிரிக்கெட் போட்டிகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியில் சீக்கிரம் நுழைய ஐபிஎல் மற்றும் u19  பெரிதும் உதவுகின்றன அதில் அசாதாரணமான திறமையை வெளிப்படுத்தும் வீரர்கள் உடனடியாக இந்திய அணியில் ஏதோ ஒரு போட்டியில் களமிறங்க படுகிறார்கள்.

அதற்கு எடுத்துக்காட்டாக ரிஷப் பண்ட் போன்றோரை நாம் கூறலாம். இவரை தொடர்ந்து இஷன் கிஷன், அக்ஷர் பட்டேல், பிரித்வி ஷா போன்ற இளம் வீரர்கள் தற்போது இந்திய அணியில் சிறப்பாக விளையாடி வருகின்றனர் ஆனால் ஒரு சில திறமையான வீரர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தும் அதை சரியாக பயன்படுத்தி கொள்ளாததால் மேலும் அடுத்த வாய்ப்புகள் கிடைக்காத ஒரு காரணத்தினால் U19  – ன்  இந்திய விளையாட்டு வீரர்கள் தற்போது பலரும் மற்ற நாட்டுகாக விளையாடி வருகின்றனர்.

அதுபோல இந்திய அணியின் வருங்கால விராட் கோலி என்று செல்லமாக அழைக்கப்பட்ட உன்முக் சந்த். இந்தியாவில் மிகப் பெரிய அளவில் பேசப்பட்ட இளம் கிரிக்கெட் வீரர்  இவருக்கு இந்திய அணியில் நல்லதொரு எதிர்காலம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஐபிஎல் தொடர் போன்றவற்றில் தனது ஆட்டத்தை சரியாக வெளிப்படுத்தாலும் மற்றும் அவருக்கு மேலும் சில வாய்ப்புகள் கிடைக்காததால் அவர் தற்போது அமெரிக்கா சென்று வந்த நாட்டிற்காக விளையாட உள்ளார் அதுபோல இவரைத் தொடர்ந்து இளம் வீரரான ஸ்மித் படேல் ,ஹர்மித் சிங் ஆகியோரும் போதிய வாய்ப்புகள் இல்லாததால் அமெரிக்கா அணிக்காக விளையாட சென்று விட்டனர்.

Leave a Comment