அச்சு அசல் வடிவேலு போல் நடித்தால் வீட்டுக்கு அழைத்து கும்மாங்குத்து குத்திய வைகைபுயல்.? அந்த பிரபலம் யார் தெரியுமா.?

சினிமா உலகில் ஒரு நடிகரை ரோல் மாடலாக வைத்து தான் புதுமுக நடிகர், நடிகைகள் உள்ளே வருகின்றன ஆனால் ஒரு கட்டத்தில் அச்சு அசல்  அவரையே பின் தொடர்வதால் ஒரு கட்டத்தில் அவர்கள்  வளர்ந்து பல பட வாய்ப்பை கைபற்றி அவரை போலவே நடிப்பதால் அந்த முன்னணி பிரபலம் ரொம்ப கஷ்டப்படுவதோடு பட வாய்ப்பை இழக்க நேரிடும்.

அந்த வகையில் காதல் திரைப்படத்தில் பரத்தின் நண்பனாக நடித்த காமெடி பெயர்போன நடிகராக விஸ்வரூபம் எடுத்தவர் சுகுமார். காதல் படத்தில் இவரது காமெடியை சிறப்பாக இருந்ததால் இவரை எல்லோரும் காதல் சுகுமார் என்று செல்லமாக அழைத்தனர். அந்த திரைப்படத்தை தொடர்ந்து  பல்வேறு திரைப்படங்களில் காமெடியாகவும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுகுமார் டான்ஸ், கராத்தே, சிலம்பம் போன்றவற்றிலும் திறமை கொண்டவராக விளங்கினார். வெள்ளித் திரைக்கு வருவதற்கு முன்பாக சுகுமார். மேடை நிகழ்ச்சி மற்றும் சின்னத்திரையில் காமெடி போன்றவற்றில் வடிவேலுவை இமிடேட் செய்து புகழ் பெற்றார்.  ஒரு கட்டத்தில் நடிகர் நெப்போலியன் நடித்த கலகலப்பு திரைப்படத்தில் வடிவேலுவை இமிடேட் செய்து நடித்தார்.  ஒரு கட்டத்தில் நடிகர் சுகுமாரை வடிவேலு அழைப்பு விடுத்தார்.

அப்பொழுது வடிவேலுவும் வீட்டில் இருந்தார். சுகுமார் அழைத்து நல்லவிதமாக பேசிக்கொண்டு இருந்தார் பின்னர் ஒரு கட்டத்தில் படங்களில் நீ என்னைப்போல் நடிக்கிறாயா என்று கேட்டார் வடிவேலு. அதற்கு அறிமுகப் படத்தில் நான் நடித்தேன் அதன் பிறகு உங்கள் சாயலில் நான் நடிக்கவில்லை என கூறினார்.

sukuma

தவசி படத்தில் உங்களுக்கு பதில் டூப் செய்ய சொன்னபோது கூட நான் நடிக்கவில்லை அனைத்தையும் கற்றுக் கொண்ட பின்பே சினிமாவுக்கு வந்துள்ளேன் என கூறினார் அதை கேட்ட வடிவேலு அருகில் இருந்த அவர் உடனே கோபம் அடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின் சுகுமாரை அடித்துவிட்டார். சுகுமாரின் நெருங்கிய நண்பர் ஒருவர் எச்சரிக்கை விடுவித்த காரணத்தினால் சுகுமாரை அனுப்பி உள்ளனர்.

இந்த சம்பவம் நடந்த போது கூட சிங்கமுத்து மற்றும் இயக்குனர் சீமான் அருகில் இருந்தாக நடிகர் சுகுமார் கூறியுள்ளார். சுகுமாரை போன்ற பலரும் சினிமா உலகில் முன்னேறுவதற்கு முன்பாக பலரிடம் அவமானங்களையும் சர்ச்சைகளையும் சந்தித்ததுதான் முன்னேறி வந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Exit mobile version