யானை படம் ஹிந்தியில் ரீமேக் செய்தால் ஹீரோ, ஹீரோயின் இவர்கள் தான் – அருண் விஜய் விருப்பம்.!

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் யானை. இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் சென்டிமென்ட் கலந்த திரைப்படமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பராக ஓடியது.

இந்த திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 25 கோடி வசூல் அள்ளி புதிய சாதனை படைத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அருண் விஜய் அடுத்தடுத்த பல்வேறு புதிய படங்களில் ஒப்பந்தமாகி நடிக்க உள்ளார். ஏற்கனவே அருண் விஜய் நடித்த பல்வேறு திரைப்படங்கள் இன்னும் வெளிவராமல் இருக்கின்றன.

அந்த வகையில் அக்னி சிறகுகள், பாக்ஸர், சினம் போன்ற படங்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் அருண் விஜய் சமீபத்திய பேட்டி ஒன்றில் நிருபரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார் அப்பொழுது ஹிந்தியில் யானை படம் ரீமேக் செய்யப்பட்டால் யார் நடிக்க வேண்டும் யார் இயக்க வேண்டும் என கேட்டுள்ளனர்.

அருண் விஜய் பதில் அளித்தது ரோஹித் ஷெட்டி தான் யானை படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய சரியான ஆள். அவரை தவிர வேறு யாரும் இந்த படத்தை அவ்வளவு சிறப்பாக ஹிந்தியில் ரீமேக் செய்ய முடியாது. யானை படம் ஹிந்தியில் உருவாகிறது என்றால் ஹீரோவாக நான் நடித்தால் மட்டுமே சிறப்பாக இருக்கும்.

எனக்கு ஜோடியாக ஷரதா கபூர் நடித்தால் சிறப்பாக இருக்கும் என கூறி முடித்தார். அருண் விஜய்யும் இந்த நடிகையும் ஏற்கனவே பிரபாஸின் சாஹா படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படம் வெற்றி படமாக மாறியது அதுபோல இவர்கள் இருவரும் இந்த படத்தில் நடித்தாலும் அதுவும் ஒரு மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக மாற வாய்ப்பு இருக்கிறது.

 

Leave a Comment