தல அஜித் இந்த படத்தில் நடித்தால் தமிழ் சினிமாவில் no.1 இடத்தை பிடிப்பார்.! விவரம் இதோ!!

0

Thala Ajith : தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தல அஜித். கடந்தாண்டு விசுவாசம், நேர் கொண்ட பார்வை போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. அதுமட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. நேர்கொண்டபார்வை ரீமேக் படமாக இருந்தாலும் தல அஜித் அவர்கள் இப்படத்தில் தனது கதாபாத்திரத்தில் தனது திறமையை வெளிக்காட்டி சிறப்பாக நடித்திருந்தார்.

இப்படம் பெண் சமுதாயத்திற்கு ஏற்ற படமாக அமைந்து இருந்ததால் பொதுமக்கள் மற்றும் பெண் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனை தொடர்ந்து அவர் தற்பொழுது இயக்குனரான ஹச். வினோத் உடன் இணைந்து தற்பொழுது வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நேர்கொண்டபார்வை படத்தை தயாரித்த போனிகபூர் அவர்கள் தயாரிக்கிறார்.

இப்படத்தில் இருந்து எந்த ஒரு செய்தியும் வெளியாகததால் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். இந்தநிலையில் இயக்குனர் அவர்கள் பேட்டி ஒன்றில் இப்படம் அடுத்த மங்காத்தா போல இருக்கும் என தெரிவித்திருந்தார்.இப்படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.இதனை அடுத்து அஜித் அவர்கள் எந்த படத்தில் நடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஹிந்தியில் வெளியாகி மிகப்பெரிய பிளாக்பஸ்டர்ஸ் படமாக உருப்பெற்றது Article 15.

article
article

இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ளதாக வெளியாகின. இந்தநிலையில் போனிகபூர் அவர்கள் படத்தின் உரிமையை வாங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் அஜித்தை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை அறிந்த அஜித் ரசிகர்கள் இப்படத்தில் அஜித் அவர்கள் நடித்தால் செம்மையாக இருக்கும் என கூறிவருகின்றனர்.