ரோஹித் சர்மா 2 வருடத்திற்குள் இந்த விஷயத்தை செய்ய வில்லை என்றால் அவர் ஒரு சிறந்த கேப்டன் இல்லை.? மறைமுகமாக சொல்லும் ரவிசாஸ்திரி.

இந்திய அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற இருக்கும் ரோகித் சர்மா நியூசிலாந்துடனான 20 ஓவர் போட்டியில்  கேப்டன் ஆகவும் வீரராகவும் சிறப்பாக செயல்பட்டார் மேலும் போட்டியை 3- 0 என்ற கணக்கில் வென்று காட்டினார் அதனை தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவுடனான போட்டிகளிலும் அவர் சிறப்பாக இருக்கிறார்.

அதற்கு முன்பாக 20 ஓவர் போட்டியில் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளிலும் கேப்டனாக செயல்பட அறிவுறுத்தி உள்ளது. ஆனால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கோலி கேப்டனாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் பிசிசிஐ ஒருநாள் தொடரிலும் ரோஹித் கேப்டனாக செயல்படுவார் என முடிவாகச் சொல்லி விட்டது.

இதனை அடுத்து ரோகித் சர்மா ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் கேப்டனாக செயல்பட இருக்கிறார் கோலி டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே கேப்டனாக செயல்படுவார் என கூறப்பட்டது. ரோகித் சர்மாவுக்கு கேப்டன்ஷிப் மற்றும் வீரராக சிறப்பாக செயல்படும் திறமை அவரிடம் அதிகம் இருக்கிறது இதனால் அவர் இந்திய அணி அடுத்த லெவலுக்கு எடுத்துச் சொல்வார் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை..

இந்த நிலையில் முன்னாள் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி கூறுகையில் இந்திய அணி இளம் வீரர்கள் மற்றும் அனுபவ வீரர்கள் என இருவரும் சேர்ந்த கலவையாக இருப்பதால் எதிர்காலத்தில் மிகவும் சிறப்பாக இருக்கும். குறைந்த பட்சம் இன்னும் இரண்டு வருடம் ரோகித் சர்மா லிமிடெட் அவர் போட்டிகளில் கேப்டனாக இருப்பார் அதற்கு இளம் வீரர்கள் பலரை அவர் வளர்த்துவிட வேண்டும் இப்பொழுது இருக்கும் வேகப்பந்து வீச்சாளர்கள் ஓவியமாக வீசலாம் அடுத்தடுத்த வருடங்களில் வயதானவர்கள் இருப்பார்கள்.

இப்போது பந்துவீசும் போது அவர்களுக்கு அவர்களுக்கு இருக்கும் என கூற இயலாது ஆகையால் இந்த இரண்டு வருடங்களுக்குள் இளம் வேகப்பந்து வீச்சாளர் பலரை அணியில் எடுத்து  வைக்கவேண்டும் சரியான தருணம் வரும்போது அவர்களில் ஒரு சில வாய்ப்புகள் கொடுக்க வேண்டும் என கூறினார்.

ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பை முடித்துவிட்டு வெளியே செல்லும் போது இந்திய அணி எல்லாவிதத்திலும் ஒரு சரியான அணியாக இருக்க வேண்டும் அதை ரோகித் சர்மா சரியாக செயல்படுத்த வேண்டுமென ரவி சாஸ்திரியே கேட்டுக்கொண்டுள்ளார் மேலும் ரோஹித் சர்மாவிற்கு அந்த  திறமை இருக்கிறது அவர் அதை செய்வார் எனவும் கூறினார்.

rohit
rohit

Leave a Comment