நான் சீரியஸான படம் எடுத்தா யாரும் பார்க்க மாட்டேங்குறாங்க.. புலம்பும் அஜித் பட இயக்குனர்.!

ajith
ajith

இயக்குனர் வெங்கட் பிரபு மாநாடு, கஸ்டடி என தொடர்ந்து  நல்ல படங்களை கொடுத்து வருகிறார்  அடுத்ததாக கூட  தளபதி விஜய் உடன் கைகோர்த்து தளபதி 68 படத்தை எடுக்க திட்டமிட்டு இருக்கிறார். ஆனால்  விஜய் இப்பொழுது இளம் இயக்குனர் லோகேஷ் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் இரண்டு கட்டம் ஷூட்டிங் வெற்றிகரமாக முடிந்த நிலையில் மூன்றாவது கட்ட ஷூட்டிங் சென்னையில் போய்க் கொண்டிருக்கிறது அடுத்ததாக ஐதராபாத்தில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. லியோ படத்தில் விஜயுடன் கைகோர்த்து சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான்..

கௌதம் வாசுதேவ் மேனன், திரிஷா, ப்ரியா ஆனந்த மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு விஜய் வெங்கட் பிரபு உடன் கைகோர்ப்பார் என கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் வெங்கட் பிரபு டேனிஸ் தியேட்டர் ஸ்டுடியோஸ் திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.

அப்பொழுது பத்திரிக்கையாளரின் கேள்விக்கு பதில் அளித்தார். பத்திரிகையாளர்  நீங்கள் சீரியஸான படம் எடுத்தால் எப்படி அதை தயார்படுத்துவீர்கள் என கேள்வி கேட்டார் அதற்கு பதில் அளித்த இயக்குனர் வெங்கட் பிரபு நான் சீரியஸான படம் எடுத்தால் ஓடாது. நானும் வெற்றிமாறன் போன்று படம் எடுக்க வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் அது மக்களுக்கு பிடிக்கவில்லை.

மங்காத்தா, மாநாடு போன்ற படங்களை தான் தன்னிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள். என்டர்டைன்மெண்ட் படம் தான் எனக்கு பாதுகாப்பாக இருக்கும் சீரியஸான படம் எனக்கு செட் ஆகாது என வெங்கட் பிரபுவே வெளிப்படையாக பேசி உள்ளார் இந்த தகவல் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.