அஜித்துடன் இணையும் வாய்ப்பு கிடைத்தால்.. இப்படி ஒரு படத்தை தான் கொடுப்பேன் – லோகேஷ் கொடுத்த அப்டேட்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விரல்விட்டு என்னும் அளவிற்கு படங்களை எடுத்திருந்தாலும் அந்த படங்கள் ஒவ்வொன்றும் மெகா ஹிட் படங்கள் என்பதால் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். இவர் கடைசியாக உலக நாயகன் கமலஹாசனை வைத்து விக்ரம் படத்தை எடுத்தார்.

அந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் 410 கோடிக்கு மேல் அள்ளி புதிய சாதனை படைத்தது இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எடுக்க போகும் திரைப்படம் தளபதி 67. மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து தளபதி விஜயும், லோகேஷ் கனகராஜூம் இரண்டாவது முறையாக இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தையும் மிகப்பெரிய ஒரு ஆக்சன் திரைப்படம் போட்டிருக்கிறாராம். அதற்கான பணிகளில் தான் தற்பொழுது அதிகம் லோகேஷ் தீவிரம் காட்டி வருவதாக சொல்லப்படுகிறது. இப்படி ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் இயக்குனர் லோகேஷ்  அவ்வபொழுது பேட்டி கொடுத்து வருகிறார் அப்படி அண்மையில் பேட்டி ஒன்றில் தளபதி விஜய் வைத்து அடுத்தடுத்து படம் பண்ணுகிறீர்கள்..

எப்பொழுது அஜித்தை வைத்து எப்பொழுது படம் பண்ணுவீர்கள் என காத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு நல்ல செய்தி கொடுத்துள்ளார் ஆம் லோகேஷிடம் அஜித்துடன் இணைவீர்களா.?  என கேள்வி கேட்டதற்கு லோகேஷ் கனகராஜ் சொன்னது.. அஜித்துடன் இணைய எனக்கும் ஆசை தான்.

அப்படி அவருடன் கூட்டணி அமைந்தால் நிச்சயம் அந்த படம் தீனா மாதிரி தான் இருக்கும் என லோகேஷ் வெளிப்படையாக கூறியுள்ளார். அஜித் ஏகே 62 படத்தை முடித்து,  இளம் இயக்குனர் லோகேஷ் தளபதி 67 படத்தை முடித்துவிட்டு இருவரும் அடுத்த படத்தில் இணைய வேண்டும் என ரசிகர்கள் கேட்டுக் கொண்டு வருகின்றனர்.

Leave a Comment