உண்மையில்.. ஒரு நாள் முதல்வராக இருக்க வாய்ப்பு கிடைத்தால் மக்களுக்கு இதை இலவசமாக கொடுப்பேன் – அர்ஜுன் பேட்டி..!

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருவர் நடிகர் அர்ஜுன். இவர் திரை உலகில் ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து ஓடிக்கொண்டு இருக்கிறார். இதனால் அவரது மார்க்கெட்ட ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் குறையாமலையே இருக்கிறது.

இவர் முதலில் கன்னட படத்தில் நடித்து அறிமுகமானார். தமிழில் 1984 ஆம் ஆண்டு நன்றி என்ற படத்தில் நடித்து அறிமுகமானார் அதன் பின் தமிழில் இவர் எங்கள் குரல், யார், அவன், ஜெய்ஹிந்த், ஜென்டில்மேன், ரிதம், வானவில், முதல்வன் என பல படங்களில் நடித்து வெற்றியை பெற்றார் சினிமா உலகில் ஹீரோவாக பல படங்களை கொடுத்திருந்தாலும்..

ஒரு கட்டத்தில் இவர் இயக்குனராகவும், தயாரிப்பாளராக விஸ்வரூபம் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பொழுது கூட பல்வேறு டாப் நடிகர்களின் படங்களில் வில்லன் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஹைதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நடிகர் அர்ஜுன் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார்.

அவர் கூறியது நான் போலீசாக ஆசைப்பட்டேன் அது நடக்கவில்லை மாறாக சினிமா உலகில் நடிக்க வந்து விட்டேன். மக்கள் என்னுடைய பழைய படத்தை பார்த்து கேலி செய்கிறார்கள் ஸ்ரீ ஆஞ்சநேயம் என்னும் தெலுங்கு படத்தில் ஆஞ்சநேயராக நடித்த அதன்பிறகு என்னை யார் பார்த்தாலும் கையெடுத்து கும்பிடுகிறார்கள். அதே போன்று முதல்வன் படத்தை பார்த்த பிறகு நிறைய பேர் என்னிடம் நீங்கள் அரசியலில் ஈடுபடுங்கள் என்று சொன்னார்கள்..

அந்த படத்தில் வருவது போன்று தலைவர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று மக்கள் நினைக்கிறார்கள் முதலில் அந்த படத்தில் நடித்ததற்கு யோசித்தேன் ஆனால் முதல்வன் திரைப்படம் எனக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது இயக்குனராக வேண்டும் என்ற ஒரு ஆசை இருக்கிறது. நடிகர்களை பற்றி கிசுகிசுக்கள் வந்தால் அவர்களின் குடும்பத்தினர் மிகவும் வேதனைப்படுகின்றனர். எனக்கு ஒரு நாள் முதல்வராக வாய்ப்பு கிடைத்தால் கல்வி மற்றும் மருத்துவத்தை அனைத்தும் மக்களுக்கு இலவசமாக்குவேன்  என கூறினார்.

Leave a Comment