விஜயை வைத்து திரைப்படம் இயக்கினால் இப்படி ஒரு திரைப்படத்தை தான் நான் எடுப்பேன்..! பேட்டியில் ரகசியத்தை உடைத்த பா ரஞ்சித்..!

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி மிக குறுகிய காலத்தில் பிரபலமான இயக்குனரான ஒருவர்தான் இயக்குனர் பா ரஞ்சித். இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகமானார் இவ்வாறு இவர் அறிமுகமான முதல் திரைப்படமே இவருக்கு சூப்பர்ஹிட் திரைப்படமாக அமைந்துவிட்டது.

இதனை தொடர்ந்து சூர்யாவின் தம்பி கார்த்திகைவைத்து மெட்ராஸ் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார் அதன் பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கபாலி காலா போன்ற திரைப்படங்களை உருவாக்கி இருந்தார் ஆனால் இத்தகைய படங்கள் அவருக்கு சொல்லும்படி பிரபலத்தை கொடுக்கவில்லை என்றாலும் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.

இந்நிலையில் எப்படியாவது ஒரு மெகா ஹிட் திரைப்படத்தை கொடுத்துவிட வேண்டும் என வெகு நாளாக வேட்டையாடிய பா ரஞ்சித் அவர்கள் சமீபத்தில் ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை என்ற திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கண்டுள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் தளபதி விஜய்யை வைத்து சூப்பர் ஹீரோ என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார். அந்தவகையில் தளபதி விஜய் சமீபத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடி வந்த நிலையில் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படமானது ஒரு த்ரில்லர் திரைப்படமாக இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்து வருகிறார்கள்.  அந்த வகையில் பா ரஞ்சித் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய போது விஜய்யை வைத்து இயக்கப் போகும் சூப்பர்ஹீரோ திரைப்படத்தை பற்றி பேசியுள்ளார்.

பொதுவாக சூப்பர் ஹீரோ திரைப்படம் என்றால் பல்வேறு சக்திகளை உள்ளவர் போல காட்டப்படும் என்று நினைக்கும் வகையில் தன்னுடைய பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஒவ்வொருவரும் சூப்பர் ஹீரோ தான் அதற்க்கு சக்தி ஒன்றும் தேவை கிடையாது என்று கூறியுள்ளார்.

pa ranjith-1
pa ranjith-1

அந்தவகையில் கற்பனைக்கும் உண்மைக்கும் உள்ள தொடர்பையே இந்த திரைப்படத்தில் நான் காட்டப் போகிறேன் என பா ரஞ்சித் கூறியுள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் இருக்கும் காட்சிகள் அனைத்தும் கற்பனை கிடையாது மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அவர்களுக்கு  பிடிக்கும் வகையில் இத்திரைப்படத்தை  உருவாக்கியுள்ளேன் என் ப ரஞ்சித் கூறி உள்ளார் .

Leave a Comment