இந்திய அணியில் இவர் விளையாண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் இவரை மிஸ் செய்து விட கூடாது – விவி எஸ் லட்சுமணன் அதிரடி.

v v s laxman
v v s laxman

இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியை முடித்த கையோடு அடுத்ததாக இங்கிலாந்தில் நடைபெற உள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது இதற்கிடையே இலங்கை அணியுடன் இந்திய அணி விளையாடும் என கூறப்பட்டுள்ளது.

இதனால் இந்திய அணி இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது ஒரு அணி இங்கிலாந்திலும் மற்றொரு அணி இலங்கை அணியுடனான போட்டியிலும் போதும் என ஏற்கனவே பிசிசிஐ தரப்பில் இருந்து கூறப்பட்டது.

இந்தநிலையில் இலங்கை தொடரில் இளம் வீரர் சூர்யகுமார் யாதவ் இருக்க வாய்ப்புகள் வழங்கப்படுவதோடு மட்டுமல்லாமல் அனைத்து வடிவிலான போட்டியிலும் வாய்ப்புகள் வழங்க வேண்டும் என தனது கருத்தை தெரிவித்துள்ளார் விவிஎஸ் லட்சுமணன்.

அவர் கூறியது இந்த இலங்கை தொடரானது இளம் வீரர்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமைய போகிறது. என்னை பொறுத்தவரை சூர்யகுமார் அனைத்து போட்டிகளிலும் விளையாட விரும்புகிறேன் ஏனென்றால் என்னைப் பொறுத்தவரை எதிர்வரும் T20 உலகக் கோப்பையில் இடம் பெற தகுதியான வீரர் என்று நான் அவரை கூறுவேன்.

surya kumar yadav
surya kumar yadav

சர்வதேச கிரிக்கெட்டில் ரன்கள் குவிக்கும் நம்பிக்கை அவர் பெற்றால் அவர் இன்னும் சிறப்பாக விளையாட முடியும் என கூறினார். அதுபோல ரசிகர்களும் நிச்சயம் அவர் இந்திய அணியில் மிகப்பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வல்லமை பெற்றவர். வெகு விரைவிலேயே அனைத்து வடிவிலான போட்டியிலும் விளையாட வேண்டும் எனவும் ரசிகர்கள் சமூக வலைதளத்தின் மூலம் கூக்குரலிட்டு வருகின்றனர்.