தோனி போயிட்டா இவர்தான் கேப்டனா.? முன்னாள் இந்திய வீரர் பரபரப்பு பேட்டி

சிஎஸ்கே அணி ஆரம்பித்த காலத்தில் இருந்து கேப்டனாக இருப்பவர் தல தோனி இவர் பல வெற்றிகளை அணிக்கு சேர்த்துள்ளார் அது மட்டும் இல்லாமல் தோனி என்றால் எதிரில் இருக்கும் வீரர்களுக்கு பயம் இருக்கும் அந்த அளவு அதிரடி பேட்ஸ்மேன் கூல் கேப்டன் என்ற பெயரை எடுத்தவர். சிஎஸ்கே அணியில் தோனிக்கு இது தான் கடைசி ஐபிஎல் என்றால் அடுத்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் இது போல் தான் இருக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார் பிரக்கயன் ஓஜா.

அடுத்த வருடம் 2023 வது ஐபிஎல் போட்டி தொடங்க இருக்கிறது இந்த நிலையில் இதற்கான ஏலம் டிசம்பர் மாதம் நடைபெறும் எனவும் தகவல் கிடைத்துள்ளது அதற்குள் தங்கள் டீமில் தக்க வைத்துள்ள வீரர்களையும் வெளியே அனுப்பப்படும் வீரர்களையும் அந்தந்த அணி அறிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்கள். இந்த நிலையில் சென்னை அணியில் தொடர்ந்து விளையாட மாட்டார் ஜடேஜா என பலரும் கூறி வந்த நிலையில் தோனி தலையிட்டு  ஜடேஜா இந்த அணியில் தான் இருப்பார் என சிஎஸ்கே அணி ஜடேஜாவை தக்க வைத்துள்ளார்.

அது மட்டும் இல்லாமல் தோனிக்கு இது தான் கடைசி ஐபிஎல் எனவும் அதன் பிறகு கேப்டன் பொறுப்பை ஜடேஜா ஏற்று விளையாடுவாரா இல்லை வேறு யாராவது கேப்டனாக பொறுப்பேற்பார்களா என பலருக்கும் கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை ஜடேஜா கேப்டன் பொறுப்பை ஏற்கவில்லை என்றால் அடுத்ததாக கேப்டனாக நியமிக்க சிஎஸ்கே அணி தகுதியான வீரரை தற்பொழுது காலத்தில் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறது.

இந்த நிலையில் தோனி வருகின்ற ஐபிஎல் இல் ஓய்வு பெற்று விட்டால் அடுத்த கேப்டனாக வருபவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என தனது கருத்தை தெரிவித்துள்ளார் இந்திய சுழல் பந்துவீச்சாளர் பிரகயன் ஓஜா. தோனி அணியில் இருக்கிறார் என்றால் அவர்தான் கேப்டனாக இருக்க வேண்டும். ஏனென்றால் அவரைப் போல் யோசிக்க யாராலும் முடியாது அதற்கு முன் உதாரணம் கடந்த ஐபிஎல் தான் தோனியை வைத்துக்கொண்டு மற்றொருவர் கேப்டன் பொறுப்பு என்றால் அது எப்படி சரியாக இருக்கும்.

தோனி இதுதான் கடைசி ஐபிஎல் என்றால் அடுத்து ஒரு கேப்டன் குறைந்தபட்சம் 5 டு 6 வருடங்கள் கேப்டன் பொறுப்பில் இருந்திருக்க வேண்டும் அப்பொழுதுதான் டீமை சரியாக வழிநடத்த முடியும். பொதுவாக சென்னை அணி ஒவ்வொரு போட்டிக்கும் வீரர்களை மாற்றும் பழக்கம் இல்லை வீரர்கள் சரியாக ஆடவில்லை என்றாலும் அவர்கள் மீது நம்பிக்கை வைத்து தொடர்ச்சியாக விளையாட வைத்திருக்கிறார்கள் ஒரு போட்டி இல்லை என்றாலும் அடுத்த போட்டிகளில் வீரர்கள் நன்றாக செயல்படுவார்கள் அதனை அதிக முறை நிரூபித்துள்ளார்கள்.

கடந்த வருடத்தில் என்னை கேட்டிருந்தால் கேன் வில்லியம்சை அடுத்த கேப்டனாக கூறியிருப்பேன் தோனிக்கு பின் சில வருடங்கள் அணியை நன்றாக எடுத்து செல்பவர் இவர்தான் என கூறியிருப்பேன் என இந்திய சுழல் பந்துவீச்சாளர் கூறியுள்ளார் அதுமட்டுமில்லாமல் ஐபிஎல் ஏலத்திலும் வில்லியம்ஸ் இருக்கிறார் ஆனால் அவரது பெர்ஃபார்மன்ஸ் சரியாக இல்லை  சென்னை அணி இதனை கருத்தில் கொண்டு ஐந்து ஆறு வருடங்கள் விளையாடுவார என ஆராய்ந்து நிர்வாகம் சரியாக யோசித்து ஒரு முடிவை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Leave a Comment