தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம்வரும் நடிகர் சிம்பு அவர்களுக்கு தற்போது வரையிலும் திருமணமாகாதது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் சிம்பு மற்றும் டி ராஜேந்திரன் அவர்களை எங்காவது பார்த்தால் ரசிகர்களும் நெட்டிசன்களும் சிம்புவிற்கு எப்போது கல்யாணம் என கேள்வி கேட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் ஜீ தமிழில் நடந்த சிங்கிள் பசங்க என்ற சோவில் பிரபல சீரியல் நடிகை ஒருவர் கலந்து கொண்டு உள்ளார். அந்த ஷோவிற்கு நடுவராக டி ஆர் அவர்கள் பங்கேற்றுள்ளார். அப்போது டி ஆர் ஐ பார்த்து திருமணம் என்று செய்தால் அது சிம்புவை தான் என டி ஆர் முன்பு பிரபல சீரியல் நடிகை கூறியுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர் 2 சீரியலில் ஒரு முக்கிய அங்கமாக நடித்து வருபவர் தான் நடிகை சாந்தினி இவர் சிங்கிள் பசங்க சோவில் கலந்து கொண்ட நிலையில் நான் திருமணம்னு ஒண்ணு செய்தால் அது நடிகர் சிம்புவை தான் என கூறியுள்ளார்.

இதைப் பார்த்த டிஆர் அவர்கள் கண்கலங்கிவிட்டார். 42 வயது ஆகியும் சிம்புவிர்க்கு ஏன் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறார் என்று பல கேள்விகள் வந்தாலும் ஒரே பதிலாக தன்னுடைய மகனை யார் அதிக காதலுடன் பார்த்துக் கொள்கிறாரோ அவர் நிச்சயமாக கிடைப்பார் என்று ஆண்டவரிடம் பிரார்த்தனை செய்கிறேன் என்று கூறியுள்ளார்.
அது மட்டுமல்லாமல் நானும் என் மனைவியும் சிம்புவை கட்டாயம் செய்தோம் என்றால் அவர் நிச்சயமாக மறுக்க மாட்டார் ஆனால் நாங்கள் அப்படி செய்யப்போவதில்லை எதுவாக இருந்தாலும் ஆண்டவன் பார்த்துக் கொள்வார் என்று கூறியுள்ளார் நடிகர் டி ஆர்.