ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே 21ம் இருந்து முன்னேறி 11வது இடத்திற்கு வந்துள்ளார்.
மேலும் புஜாரா தொடர்ந்து 4வது இடத்தில் உள்ளார். அதே வேளையில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் பும்ரா 10வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இதனை தொடர்ந்து முகமது ஷமி 19வது இடத்திற்கும், இஷாந்த் சர்மா 21வது இடத்திற்கும் முன்னேறி உள்ளனர்.
இதனிடையே இந்த தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் கோலி தொடர்ந்து முதலாம் இடத்தில் உள்ளார். மேலும் இரண்டாவது இடத்தில ஸ்டீவ் ஸ்மித் இரண்டாம் இடத்திலும், வில்லியம்ஸ் 3 வது இடத்திலும் இருக்கிறார்கள்.
அதேபோல் பந்துவீச்சில் முதல் இடத்தில pat cummins முதல் இடத்திலும் kagiso rabada இரண்டாம் இடத்திலும் james anderson முன்றம் இடத்திலும் இடம்பெற்றுள்ளார்கள். இதோ முழு தரவரிசை பட்டியல்.
