இதலாம் ஒரு விதியா.! ஏற்றுகொள்ளவே முடியாது.! கொதித்தெழும் முன்னால் கிரிகெட் வீரர்கள்

0

உலக கோப்பை கடைசி போட்டியில் இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியும் மோதியது இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 241 ரன்கள் எடுத்திருந்தது அடுத்ததாக களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 241 ரன்கள் எடுத்தது அதனால் மேட்ச் சமமானது அதனால் சூப்பர் ஓவர் முறையை கடைப்பிடித்தது.

இந்த சூப்பர் ஓவரில் icc விதிப்படி இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது இதில் ஒரு ஓவரில் இங்கிலாந்து  அணி 15 ரன்கள் எடுத்தது அடுத்ததாக களமிறங்கிய நியூசிலாந்து அணி அதேபோல் ஒருவர் முடிவில் 15 ரன்கள் எடுத்து சமன் செய்தது. அதனால் அதிக பவுண்டரிகள் அடித்த அணி எது என்று பார்த்து வெற்றி பெற்ற அணியாக அறிவித்தார்கள், அதனால் பவுண்டரி அடிப்படையில் இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது.

இந்த விதியை ஏற்றுக்கொள்ள முடியாது என பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்களது கருத்தை கூறிவருகிறார்கள், இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த விதியை பயன்படுத்தி எப்படி இறுதி முடிவை எடுத்தார்கள் போட்டி டையில் முடிந்துவிட்டதால் இரண்டு அணிகளுக்கும் வாழ்த்துக்கள் என்னை பொருத்தவரை இரண்டு அணிகளுமே வெற்றியாளர்கள் தான் எனக் கூறியுள்ளார்.

அதே போல் இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கூறுகையில் ஐசிசி விதிக்கு நான் உன்ன உடன்படவில்லை ஆனால் விதிகள் விதிகள்தான்.

அதேபோல் முன்னாள் வீரர் முகமது கைப் கூறுகையில் இந்த விதியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை எனக் கூறியுள்ளார்.