ICC RANKING : விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய ரோகித் சர்மா.. முதல் இரண்டு இடத்தில் யார் தெரியுமா.?

World cup 2023 : இந்தியாவில் உலகக்கோப்பை போட்டி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது இந்திய அணி முதல் மூன்று போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை பெற்று பாயிண்ட்ஸ் டேபிள் முதல் இடத்தை பிடித்துள்ளது நாளை வங்கதேச அணியை எதிர்த்து இந்திய அணி விளையாட இருக்கிறது.

இந்த நிலையில் ஐசிசி உலக கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரோகித் சர்மா ஒரு நாள் தரவரிசை பட்டியலில் முன்னேற்றத்தை கண்டுள்ளார். அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..  ரோகித் சர்மா கடைசி இரண்டு போட்டியில் சிறப்பாக ஆடி உள்ளார் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 131 ரன்கள் எடுத்தார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக 86 ரன்கள் எடுத்து ஐசிசி தரவரிசை பட்டியலில் முன்னேறி இருக்கிறார். ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் ரோகித் சர்மா 6 – வது இடத்தில் தற்போது நீடிக்கிறார் விராட் கோலி ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார். தென் ஆப்பிரிக்கா அணியின் டி காக் உலககோப்பை போட்டியில் இரண்டு நூறுகள் அடித்துள்ளார்.

இதன் மூலம் அவர் ஒருநாள் கிரிக்கெட் பேட்டர்கள் தரவரிசையில் 742 புள்ளிகள் எடுத்து மூன்றாவது இடத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் சுமன் கில் நீடிக்கிறார் முதல் இடத்தில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் இருக்கிறார். பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர் ஹசல்வுட் முதல் இடத்தை நீடிக்கிறார்.

இரண்டாவது இடத்தில் நியூசிலாந்து அணியின் வேகபந்து பேச்சாளர் ட்ரெண்ட் போல்ட் 659 புள்ளிகள் எடுத்து இருக்கிறார் மூன்றாவது இடத்தில் இந்திய அணியின் வேக பந்து வீச்சாளர் முகமது சிராஜ் இருக்கிறார் அவர் எடுத்துள்ள புள்ளிகள் 656 என்பது குறிப்பிடத்தக்கது.