நோ பாலில் அவுட்டாகிட்டாங்களா.! இனி கவலையே வேண்டாம் இதோ வந்துவிட்டது ஐசிசியின் புதிய ரூல்ஸ்.!

0
icc
icc

ICC Rules : கிரிக்கெட் வீரர்கள் பலர் நோ பாலில் அவுட்டாகி வெளியேறுகிறார்கள் இதில் சில நடுவர்களின் கணிப்பு தவறாக இருப்பதால் வேறு வழியில்லாமல் வெளியேறுகிறார்கள், இதனை தடுக்கும் விதமாக ஐசிசி புதிய ரூல்ஸ் ஒன்றை முடிவு செய்துள்ளது.

கிரிக்கெட் போட்டியில் நடுவர் முடிவுதான் ஆட்டத்தின் போக்கை மாற்றும், அதனால் நடுவர் கரெக்டாக கூறினால் மட்டுமே ஆட்டம் முடிவுக்கு வரும், ஆனால் நடுவர்களின் தவறான முடிவும் போதிய அனுபவமும் இல்லாமல் கொடுக்கும் முடிவும் கடுமையான விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

நடுவர்களின் சில நேரங்கள் எடுக்கும் முடிவு ஆட்டத்தை ஏமாற்றி விடுகின்றனர் அதற்கு உதாரணமாக சொல்லப்போனால் உலக கோப்பையில் நடைபெற்ற கடைசி போட்டியில் இங்கிலாந்து நியூசிலாந்து மோதிய போட்டியில் ஓவர் த்ரோ ரன்கள் கூறலாம். இதனை தடுக்கும் விதமாக ஐசிசி புதிய விதியை கொண்டு வந்துள்ளது.

இந்த விதியை முதலில் சர்வதேச கிரிக்கெட்டில் வீரர்கள் ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும் அதனால் நோ பால் எல்பிடபிள்யூ விக்கெட்டுகளை வீரர்களால் கேட்க முடியாது. அதனால் நடுவர் ஒவ்வொரு முறை பந்து வீசும் போதும் நோபால் வீசப்பட்டு உள்ளதா என்பதை கணிக்க வேண்டும் என்ற விதியை பிசிசிஐ தரப்பில் கோரிக்கையை முன்வைத்தார்கள்.

இந்த விதியை இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் நடைமுறைப்படுத்த ஐசிசி அனுமதி அளித்துள்ளது, அதேபோல் சர்வதேச போட்டிகளிலும் இந்த விதியை செயல்படுத்த icc முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன, அதனால் இனி நோ பால் மூலம் ஏற்படும் விக்கெட்டை தடுக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.