20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணியில் சமிக்கு பதிலாக இந்த CSK வீரரை விளையாட வைத்து இருந்தால் நான் ரொம்ப சதோஷப்பட்டு இருப்பேன்.? ஆகாஷ் சோப்ரா பளீர்.

0

ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் தொடங்க உள்ள 20 ஓவர் உலக கோப்பை தொடரில் விளையாட இந்திய அணி தற்போது ரெடியாக இருக்கிறது. முதல் 15 பெயரை இந்திய அணி சமீபத்தில் அந்த லிஸ்டை வெளியிட்டது அந்த 15 பேரும் சிறந்த வீரர்கள் என்பதால் கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் ரசிகர்கள் BCCI க்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மேலும் அனுபவம் மற்றும் அதிரடி வீரர்கள், சிறந்த பந்துவீச்சாளர் என அனைத்திலும் துல்லியமான வீரர்கள் இருப்பதால் இந்திய அணி வெற்றி பெற அனைத்து விதமான வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஒரு சிலர் பந்து வீச்சில் ஒரு சில வீரர்களை மாற்றி அமைத்திருந்தால் நிச்சயம் கோப்பையை தட்டி தூக்கும் என கூறி வருகின்றனர்.

அந்த வகையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா. வர இருக்கின்ற 20 ஓவர் உலக கோப்பை தொடரில் சிஎஸ்கே அணியிலும் இந்திய அணியிலும் சமீப காலமாக சிறப்பான பந்துவீச்சை வீசிவரும் தீபக் சஹர் இடமளிக்க வேண்டும் என குறிப்பிட்டு பேசியுள்ளார்.

தீபக் சஹர் பந்தை இடது பக்கமும் வலது பக்கமும் ஸ்விங் செய்து எதிரணி வீரர்களை அச்சுறுத்துவதோடு விக்கெட்டுகளையும் அள்ளி வீசி வருகிறார். இப்படிப்பட்ட ஒரு சிறந்த வீரரை விட்டுவிட்டீர்கள் என்னை பொருத்தவரை முகமது சமிக்கு பதிலாக தீபக் சஹரை தேர்வு செய்திருக்கலாம்.

deepak chahar
deepak chahar

20 ஓவர் கிரிக்கெட்டில் தீபக் சஹர் -ன் பங்களிப்பு வேற லெவல் இருந்துள்ளது மேலும் பவர் பிளேயின் விக்கெட் எடுக்கும் திறமை அவருக்கு அதிகம் இருக்கிறது. என்னை பொறுத்தவரை அவர் T20 கிரிக்கெட் டில் மிகச்சிறந்த வீரராக இருக்கிறார் அவரை எடுக்காதது சற்று வருத்தத்தை கொடுக்கிறது என கூறினார்.