காசுக்காக அந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன்.? ரஜினி பட வாய்ப்பை தூக்கி எறிந்த ராஜ்கிரன்

தமிழ் சினிமா உலகில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், நடிகராகவும் வெற்றிகளை அள்ளி வருபவர் ராஜ்கிரன் இவர் முதலில் என் ராசாவின் மனசிலே படத்தில் ஹீரோவாக நடித்து வெற்றிகளை அள்ளினார் அதன் பிறகு அரண்மனை கிளி, நந்தா, சண்டக்கோழி, முனி என பல படங்களில் ஹீரோவாகவும் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தினார்.

இப்பொழுதும் கூட வருடத்திற்கு குறைந்தது இரண்டு மூன்று படங்களில் நடித்து வருவதால் அவருடைய சினிமா பயணம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது இப்படிப்பட்ட ராஜ்கிரண் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர்களின் படங்களில் பெரிதாக நடித்தது இல்லை.  ஆனால் 2007 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் உருவான சிவாஜி திரைப்படத்தில் வில்லனாக நடிக்க..

இவருக்கு வாய்ப்பு கிடைத்தது ஆனால் அந்த வாய்ப்பையும் வேண்டாம் என உதவி தள்ளிவிட்டார் ராஜ்கிரண் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. சிவாஜி பட குழுவினர் ராஜ்கிரனை அணுகி இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க வேண்டும் என கேட்டுள்ளனர். ஆனால் அவரோ ரொம்ப மகிழ்ச்சி ஆனால் இந்த கதாபாத்திரத்தில் என்னால் நடிக்க முடியாது இதில் ஒரு கெட்டவனாக நடிக்க வேண்டும்.

ஏதோ நான் வாழ்கின்ற வாழ்க்கையில் இருந்து சில பகுதிகளை எடுத்து யதார்த்தமாக நடித்து வருகிறேன் அதனால் வில்லன் கதாபாத்திரத்தில் என்னால் நடிக்க முடியாது இந்த படத்தில் நடித்தால் சம்பளம் அதிகமாக வரும் என்பது எனக்கு தெரிகிறது ஆனால் எந்த காரணத்தை கொண்டும் பணத்திற்காக வில்லனாகவோ அல்லது இதுபோன்று எனக்கு வராத கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன்..

எனக்கு எது வருமோ அதை மிகவும் நேர்த்தியாக செய்து வருகிறேன் எனக் கூறி ரஜினி படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவற விட்டு உள்ளார். விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும் இப்பொழுது காசுக்காக எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்கிறார்கள் ஆனால் நீங்கள் வேற லெவல் எனக்கும் ஒரே கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Leave a Comment