தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவருமே மாபெரும் நடிகர்களாக வலம் வருவது மட்டும் இல்லாமல் இவர்கள் இருவரும் சுமார் பல வருடங்களுக்கு முன்பாக மோதியதன் காரணமாக தற்பொழுது மீண்டும் ஒரே நாளில் இவருடைய திரைப்படங்கள் வெளியாவதன் காரணமாக ரசிகர்கள் மிக ஆவலுடன் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கும் நிலையில் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி இந்த திரைப்படம் தியேட்டரில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பொதுவாக அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவருக்குமே ரசிகர் கூட்டத்திற்கு பஞ்சமே கிடையாது அந்த வகையில் கோடிக்கணக்கான ரசிகர்கள் இவர்களுக்கு இருக்கும் நிலையில் வாரிசு மற்றும் துணிவு திரைப்படத்தின் முதல் நாள் காட்சி மிகவும் பயங்கரமாக இருக்கும் என்பதை உணர முடிகிறது.
ஆனால் நடுநிலை ரசிகர்களாக இருப்பவர்கள் இந்த திரைப்படத்தை முதலில் பார்ப்பார்கள் என்ற கேள்வி தற்போது சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது மேலும் இதனை தொடர்ந்து வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரண்டு திரைப்படங்களில் எந்த திரைப்படத்தை நீங்கள் முதலில் பார்ப்பீர்கள் என சில பிரபலங்களிடம் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கேள்வியால் பல பிரபலங்கள் தர்ம சங்கடத்தில் ஆளானது மட்டும் இல்லாமல் துணிவு திரைப்படத்தின் இயக்குனர் வினோத் திடம் கூட இந்த திரைப்படம் பற்றிய கேள்வி கேட்கப்பட்ட நிலையில் அவர் கூறியது என்னவென்றால் நான் விஜயின் வாரிசு திரைப்படத்தை தான் முதலில் பார்ப்பேன் என்று கூறியுள்ளார்.
ஆகையால் கண்டிப்பாக விஜய் திரைப்படம் வெளியாகும் தியேட்டர்களில் சென்னையில் ஏதேனும் ஒரு தியேட்டரில் வினோத் அவர்கள் நிச்சயம் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

