நடிகர் விஷாலை கொள்ளுவேன்…! விருது விழா நிகழ்ச்சியில் சொன்ன வரலட்சுமி சரத்குமார்.!

சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக ஓடிக் கொண்டிருக்கிறார். இவர் போடா போடி திரைப்படத்தில் நடித்து தனது பயணத்தை ஆரம்பித்தார் அதன் பின் தொடர்ந்து ஹீரோயின், குணச்சித்திர கதாபாத்திரம் போன்ற பல்வேறு..

படங்களில் நடித்து தனது முழு திறமையை வெளிப்படுத்தி தொடர்ந்து வெற்றியை பெற்றவர். குறிப்பாக வில்லி கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்தவர் அந்த வகையில் சண்டக்கோழி 2 படத்தில்  விஷாலுக்கு வில்லியாகவும், சர்க்கார் படத்தில் விஜய்க்கு வில்லியாகவும் நடித்து மிரட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சோலோ படங்களிலும் நடித்து வருகிறார் இதனால் நாளுக்கு நாள் நடிகை வரலட்சுமியின் சினிமா பயணம் உயர்ந்து கொண்டே போகிறது. நடிப்பதையும் தாண்டி வரலட்சுமி சரத்குமார் இயக்குனராவதிலும் அதிகம் முயற்சி எடுத்து வருகிறார். தொடர்ந்து சினிமாவில் ஓடிக் கொண்டிருந்தாலும்..

ரசிகர்களை வளைத்து போட அவ்வப்போது நடிகை வரலட்சுமி சரத்குமார் அரைகுறை ஆடையில் இருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசி அசத்தி வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் சமீபத்திய மேடை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்பொழுது  அவரிடம் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது மேலும்  அதில் kiss, kill, marry என மூன்று  வாசகங்கள் இருந்தது அதற்கு பதில் அளிக்குமாறு வரலட்சுமி சரத்குமாரிடம் கேட்டு உள்ளனர் அதற்கு அவர் பதில் அளித்தது. Kiss நடிகர் சிம்பு, kill நடிகர் விஷால் என கூறினார் உடனே அரங்கமே கூச்சலிட்டது. கடைசியாக marry என்ற வாசகத்திற்கு அது யாராவது இருக்கலாம் எனக் கூறி மேடையை அலற விட்டார்.

Leave a Comment