அதுல ஒரு ரவுண்டு போனாதான் நல்ல நடிப்பேன்..! அட்லீயை அலரவிட்ட பிரபலம்

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகைகளாக இருக்கும் பலரும்… முதலில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் ஹீரோயின்னாக வெற்றியை காணுகின்றனர் அந்த வகையில் நடிகை மீனா முதலில் குழந்தை நட்சத்திரமாக பல டாப் நடிகர்களுடன் நடித்து பின் ஒரு குறிப்பிட்ட வயதை எட்டிய பிறகு அதே டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வெற்றிகளை அள்ளினார்.

ஒரு கட்டத்தில் உச்ச நட்சத்திர நடிகர்களான ரஜினி, பிரபு கார்த்தி, சத்யராஜ், அஜித் போன்ற நடிகர்களுடன் நடித்து அசத்தினார். இதனால் ஒரு கட்டத்தில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றதோடு மட்டுமல்லாமல் இவருக்கு என ரசிகர்களும் உருவாகினார்.. இப்படி ஓடிக்கொண்டிருந்த இவர் திருமணத்திற்கு பிறகு பெரும்பாலும் நடிக்கவில்லை..

ஆனால் அவரை  தொடர்ந்து அவரது மகள் நைனிகா தற்போது சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார் முதலில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்து அசத்தினார்.  தெறி படத்தில் நைனிகா நடித்த அனுபவத்தை சில வருடங்களுக்கு முன்பு இயக்குனர் அட்லீ பகிர்ந்தார் அதில் அவர் சொன்னது..

ஒரு முறை நைனிகாவை வைத்து ஷூட்டிங் எடுத்துக் கொண்டிருந்தோம் அந்த நேரத்தில் ஆட்டோ வந்தது அவளுடைய கவனமும் சிதறி அது என்ன என்று கேட்டார். நைனிகா ஆச்சரியத்துடன் பார்த்தார் அப்பொழுது தான் எனக்கு ஒன்று தோன்றியது.. அந்த ஆட்டோவில் ஒரு ரவுண்டு போய் வந்தால் நன்றாக நடிப்பியா என கேட்டேன்..

vijay

அதன் பிறகு நைனிகா எப்பொழுதெல்லாம் கவனம் சிதறியோ அல்லது சோர்வாக இருக்கிறாரோ அப்பொழுதெல்லாம் ஆட்டோவில் ஒரு ரவுண்டு அனுப்பினோம்.. அதன்பிறகு அவரை வைத்து ஷூட்டிங் எடுத்தோம் என கூறினார் இந்த தகவல் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது.

Leave a Comment

Exit mobile version