பயோபிக் எடுக்க மாட்டேன்.. எடுத்தா இந்த ஹீரோ உடைய பயோபிக் தான் எடுப்பேன் – ஒத்த காலில் நிற்கும் லோகேஷ்.?

கடந்த நான்கு வருடங்கள் கழித்து உலகநாயகன் கமலஹாசன் நடித்த திரைப்படம் விக்ரம் இந்தப் படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் மற்றும் சென்டிமென்ட் கலந்த திரைப்படமாக இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று தற்போது வரையிலும் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதுவரை மட்டுமே சுமார் 380 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது வருகின்ற நாட்களிலும் நல்ல வசூலை அள்ளி 400 கோடி கிளப்பில் இந்த திரைப்படம் இணையும் என பேசப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் விக்ரம் மூன்றாவது பாகத்தை எடுக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

மறுபக்கம் உலகநாயகன் கமலஹாசன் இந்தியன் 2, தேவர்மகன்-2 போன்ற படங்களில் நடிக்க தொடங்கியிருக்கிறார் இது இப்படி இருக்க லோகேஷ் கனகராஜ் படத்தை தொடங்க இருக்கிறாரோ இல்லையோ தொடர்ந்து பேட்டி கொடுத்து வருகிறார். அண்மையில் பேட்டி ஒன்றில் உலக நாயகன் கமலஹாசன் குறித்தும் அவர் பேசியுள்ளார் அதில் அவர் சொன்னது

நீங்கள் ஒரு பயோகிக் எடுத்தால் யாருடைய பயோபிக் எடுப்பிங்கன்னு கேட்ட கேள்விக்கு கொஞ்சம் கூட யோசிக்காமல் லோகேஷ் கமல் சாரோட பயோபிக் தான் எடுப்பேன் என கூறினார் இது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. மேலும் பேசிய அவர் இந்த ஐடியா இந்த இரண்டு ஆண்டுகளாகத் தான் வந்தது அவர் சினிமாவில் பட்ட கஷ்டம், உழைப்பு போன்ற பல விஷயங்கள் இருக்கின்றன.

இந்த ஒரு பெரிய படத்திற்கான நிறைய விஷயங்கள் அவரது வாழ்க்கையில் இருக்கும் என்று கூறினார். லோகேஷ் சொன்னது உண்மையாக இருந்தாலும் இந்த பிரம்மாண்ட பயோபிக் எல்லாம் சிறப்பாக தான் இருக்கு ஆனால் கமல் அளவுக்கு அவர்  நடிக்க ஆள் வேண்டும் அவர் ஒருவர் கிடைப்பது ரொம்ப அரிது அவருடைய பயோபிக் கமல் நடித்தால் மட்டுமே அது சிறப்பாக இருக்கும் என கூறி வருகின்றனர் ரசிகர்கள்.

Leave a Comment