என்ன வேணா சொல்லு.. விஜயை வைத்து படம் பண்ண மாட்டேன்.? காரணத்தை சொன்ன பாரதிராஜா

தமிழ் சினிமா உலகில் வசூல் மன்னனாக ஓடிக்கொண்டிருப்பவர் தளபதி விஜய் வாரிசு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து தனது 67 வது திரைப்படமான லியோ படத்தில் நடித்து வருகிறார். படத்தில் அவருடன் இணைந்து அர்ஜுன், கௌதம் மேனன், மிஸ்கின், சஞ்சய் தத், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், பிக்பாஸ் ஜனனி..

மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் இரண்டு கட்ட ஷூட்டிங் வெற்றிகரமாக முடிந்த நிலையில் மூன்றாவது கட்ட ஷூட்டிங் சென்னை பிரசாந்த் ஸ்டூடியோவில் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது. லோகேஷ் எடுக்கும் படங்கள் அனைத்துமே ஆக்சன் படங்கள் தான்..

அந்த வரிசையில் லியோ திரை படமும் ஹாலிவுட் ரேஞ்சிக்கு மிகப்பெரிய ஒரு ஆக்சன் படமாக உருவாகி வருவதாக படக்குழு ஏற்கனவே வெளிப்படையாக சொன்னதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் விஜயை ஹீரோவாக மாற்ற எஸ் ஏ சந்திரசேகர் சிறந்த இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டார் அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் பாரதிராஜாவிடம் தனது மகன் விஜயை வைத்து ஒரு படம் பண்ண வேண்டும் என கேட்டுக்கொண்டார் ஆனால் பாரதிராஜாவோ விஜய்யை பார்த்து ஹீரோவாக ஆக்க எனக்கு தோன்றவில்லை  என வெளிப்படையாக கூறிவிட்டார்.

நடிகர் விஜய் தொடர்ந்து போராடினார். போக போகசிறந்த நடிப்பை வெளிபடுத்தினார் மேலும் அவர் அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து தற்பொழுது தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோவாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இந்த தகவல் தற்பொழுது தளபதி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

Exit mobile version