இவர்களுக்காக நான் பிச்சை எடுக்கவும் தயங்க மாட்டேன்.! மேடையில் வெளிப்படையாக பேசிய விஷால்…

0
vishal
vishal

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஷால். இவர் கடைசியாக லத்தி திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது தொடர்ந்து அடுத்ததாக தற்போது மார்க் ஆண்டனி திரைப்படத்தின் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வருமா நடித்து வருகிறார் மேலும் வில்லனாக எஸ் ஜே சூர்யா அவர்கள் நடித்து வருகின்றார்.

தற்போது மார்க்க ஆண்டனி படத்தில் இறுதி கட்ட படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தற்போது படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் சமீபத்தில் மார்க் ஆண்டனி படபிடிப்பில் சண்டை காட்சி ஒன்று படமாக்கப்பட்டு இருந்தது அப்போது லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஓடி விபத்தில் சிக்கியது.

அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்கவில்லை அது மட்டுமல்லாமல் இந்த வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனை தொடர்ந்து சமீபத்தில் மார்க் ஆண்டனி படத்தின் புதிய போஸ்டர் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனைத் தொடர்ந்து மார்க் ஆண்டனி படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஷால் அப்போது எனக்காக ஏழு வருஷம் காத்திருந்ததாக கூறி என்னை இயக்குனர் ஏமாற்றி விட்டார் என்று கூறி இருக்கிறார் அது மட்டுமல்லாமல் இப்படம் கரெக்டான டைமில் அமைந்ததால் இந்த படத்தில் நடித்து வந்தேன் என்று கூறியுள்ளார்.

அதன் பிறகு தொடர்ந்து பேசிய அவர் தற்போது என்னுடைய அம்மா பெயரில் ஒரு அறக்கட்டளை தொடங்கினேன் எதற்காக தொடங்கினேன் என்றால் ரொம்பவும் கஷ்டப்படும் பிள்ளைகளுக்காக இந்த அறக்கட்டளையை நடத்தி வருகிறேன் என்னுடைய ட்ரிம் டார்ஜெட் இரண்டு இருக்கு அதில் ஒன்று நடிகர் சங்கத்திற்கு நல்ல கட்டிடம் கட்ட வேண்டும் என்பதுதான் மற்றொன்று நான் தத்தெடுத்த கிராமத்தை முன்னேற வைக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை என்று அந்த மேடையில் வெளிப்படையாக கூறி ரசிகர்களின் மனதை நெகிழ வைத்து இருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் இந்த அறக்கட்டளையில் படிக்கும் குழந்தைகளுக்காகவும் எப்படியாவது படிக்க ஆசைப்படும் மாணவர்களுக்காகவும் இந்த அறக்கட்டளை தொடங்கி வைத்திருக்கிறேன் அது மட்டுமல்லாமல் அவர்களுக்காக நான் பிச்சை எடுக்கவும் தயங்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.