தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். அண்மைக்காலமாக இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வெற்றி படங்களாக இருந்து வருகின்றன அதன் காரணமாக தனுஷின் சினிமா மார்க்கெட் உயர்ந்து கொண்டே இருக்கிறது மேலும் தமிழை தாண்டி ஹாலிவுட் என பல்வேறு மொழி படங்களில் நடித்தும் ஓடிக்கொண்டிருக்கிறார்.
தனுஷ் கையில் தற்போது வாத்தி, திருச்சிற்றம்பலம், நானே வருவேன், க்ரே மேன் போன்ற பல படங்களில் நடித்து வருகிறார் ஒவ்வொரு படமும் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படங்கள் வெற்றி பெறும் பட்சத்தில் தமிழ் சினிமாவில் இன்னும் உச்சத்தை தொடுவார் என தெரிய வருகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் ஆரம்ப காலகட்டத்தில் நான் பட்ட அவமானங்கள் கொஞ்சநஞ்சம் இல்லை என ஒரு நேர்காணல் ஒன்றில் வெளிப்படையாக பேசி உள்ளார் தனுஷ். அது குறித்து விலாவாரியாக பார்ப்போம். காதல் கொண்டேன் திரைப்படத்தின் சூட்டிங் அனுபவத்தை பகிர்ந்து உள்ளார் தனுஷ் இந்த படத்தில் நான் சோடாபுட்டி கண்ணாடி, கிழிந்த சட்டை பேண்ட் அணிந்து படத்தில் நடித்திருப்பேன்.
சூட்டிங் ஸ்பாட்டில் ஒரு தடவை உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது சுற்றி இருந்த ரசிகர்கள் யார் ஹீரோ என கேட்க பக்கத்தில் இருந்த ஒருவர் இவர் தான் ஹீரோ என சொன்னாரு உடனே அவர்கள் பயங்கரமாக சிரித்து கலாய்த்து விட்டார் இதனை அருகில் இருப்பவரிடம் கூறி நீயும் ஹீரோ நானும் ஹீரோ என கலாய்க்க தொடங்கி விட்டனர். எனக்கு அந்த இடத்தில் என்ன சொல்வதென்று தெரியவில்லை மிகவும் வருத்தப்பட்டு நின்றேன்.

அந்த சமயம் கூட்டத்திலிருந்து ஒரு பள்ளி மாணவி எனது அருகே வந்து நோட்டுப் புத்தகத்தை நீட்டி அதில் கையெழுத்து விடுமாறு கூறினார் நான் உங்களின் துள்ளுவதோ இளமை படத்தை பார்த்து உள்ளேன் நீங்கள் அதில் சிறப்பாக நடித்தீர்கள் எனக் கூறி அந்த மாணவி என்னிடம் ஆட்டோகிராப் வாங்கிக் கொண்டு போனது என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. மேலும் அங்கு இருந்தவர்களும் இதைக் கேட்டுவிட்டு அமைதியாகி நின்றனர்